ராஜீவ் கொலை வழக்கு: நளினி, ரவிச்சந்திரன் விடுதலையா? செப்.26-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் 26-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. பின்னர் 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மொத்தம் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ல் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் மே 18-ந் தேதி மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ் இத்தீர்ப்பை வழங்கியது.
அத்தீர்ப்பில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் 31 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். அவரது சிறை தண்டனை, நன்னடத்தை, ஜாமீன் காலம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அரிதிலும் அரிதாக 142-வது பிரிவை பயன்படுத்தி இத்தீர்ப்பை வழங்கியது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை அம்மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும் இடைக்காலமாக பேரறிவாளனுக்கு வழங்கியதைப் போல தங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications