"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க உத்தரவிட முடியாது.." திட்டவட்டமாக சொன்ன உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த இரு வாரங்களாகவே தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.. மற்ற இரு ஆணையர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

Suspension of CEC Gyanesh Kumar Supreme Court Gyanesh Kumar Election Commission

உச்ச நீதிமன்றம்

போராட்டங்கள் ஒரு பக்கம் இருக்க உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.. பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இரு வழக்குகள்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியுள்ளாரா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று ராகேஷ் குமார் சிங்கின் பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது. இறுதி விசாரணை முடியும் வரை ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் தேர்தல் ஆணையம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணைய பணிகளை கவனிக்கலாம் என்று அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை

மற்றொரு மனுவை வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்துள்ளார். இதில் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் கூட்டாக எடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதி மீறப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாக்காளராக பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம் 6ல்.. புதிய தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தேவையான சட்ட திருத்தங்கள் இல்லாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கோவாவில் 97 தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான வசதி சாப்ட்வேரில் இல்லை என்று கூறி அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். மேலும், மேற்கு வங்கத்தில், நீதித்துறை அதிகாரிகளால் மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் தொடர்பாக 16.10 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கலாகி இருந்ததாகவும் இந்த மேல்முறையீடுகள் குறித்து மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையம், ஞானேஷ் குமார் உள்ளிட்டோர் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுப்பு

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஞானேஷ்குமாரை இடைநீக்கம் செய்ய எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்த பிறகு.. குறிப்பிட்ட சில முடிவுகள் ஒருமித்த கருத்து இல்லாமல் தலைமை தேர்தல் ஆணையரால் எடுக்கப்பட்டவை என்று தெரியவந்தால், அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது திரும்ப பெறவோ வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+