மத்திய பாஜக அரசின் சிஏஏவுக்கு எதிராக சாட்டையை சுழற்றுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
டெல்லி: மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இன்றைய விசாரணையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் சாட்டையை சுழற்றுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெறலாம் என்பது 1955-ம் ஆண்டு சட்டம். இந்த சட்டத்தில்தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே இந்திய குடியுரிமை பெற முடியும் என்பது மத்திய பாஜக அரசு 2019-ல் கொண்டு வந்த திருத்தம். 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் இத்திருத்தம் வகை செய்கிறது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த குடியுரிமை திருத்த சட்டம் என்பது மதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமையை மறுக்கிறது என்பது பொதுவான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதேபோல இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் இந்த குடியரிமை திருத்த சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழக கட்சிகளின் நிலைப்பாடு.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. கொரோனா காலம் என்பதால் அப்போது போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் சிஏஏவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு திடீரென அறிவித்தது. இந்த சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனால் சிஏஏ விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. தமிழ்நாடு அரசு சிஏஏவை அமல்படுத்தாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, சிஏஏ அமல்படுத்த முடியாது என சொல்லும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்றார்.
சிஏஏவுக்கு எதிராக ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களுடன் கேரளா மாநில அரசும் இணைந்து சிஏஏவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தது. முஸ்லிம் லீக், இடதுசாரிகள் என பல தரப்பும் உச்சநீதிமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்குகளின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications