54 பேரை பலி கொண்ட மணிப்பூர் வன்முறை- 3 வழக்குகளை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
டெல்லி: 54 பேர பலி கொண்ட மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பான 3 பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவு. இது மணிப்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி அம்மாநிலத்தையே பற்றி எரிய வைத்துள்ளது.

எஸ்டி பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா, குக்கி இன மக்கள் மைத்தேயி மக்களுக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. மணிப்பூர் மாநில வரலாற்றில் மிக மோசமான வன்முறையாக இது உருவெடுத்துள்ளது. தற்போது வரை இம்மோதல்களி 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.
மணிப்பூரில் சிக்கி உள்ள பிற மாநிலத்தவரை மீட்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .மணிப்பூரில் மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களது வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகி இருக்கின்றன. மணிப்பூரில் பிற மாநிலத்தவரும் மைத்தேயி இனக்குழுவினரும் சொந்த நிலத்து அகதிகளைப் போல வெளியேறுகின்றனர்.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ.வும் மணிப்பூர் சட்டசபையில் மலைபிரதேச கமிட்டி தலைவருமான டின்கங்லுங் கங்மேயி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இம்மனுவில், மைத்தேயி இனக்குழு பழங்குடிகளே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி பழங்குடிகளாக அங்கீகரிக்க முடியும்? மைத்தேயி இனத்தில் சில பிரிவினர் வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர் -எஸ்சி பட்டியலில் வர முடியும் அல்லது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியும். பழங்குடி இனத்தவராக எப்படி எதனடிப்படையில் அங்கீகாரம் தருவது? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும். ஆகையால் மைத்தேயி இனக்குழுவினரை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதேபோல உச்சநீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்த உள்ளது.
முன்னதாக மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications