சூரத் உலகின் வைர தலைநகரம்.. ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல சிசிடிவி வேலை செய்யல.. நல்லாருக்கே!: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சுப்ரீம் கோர்ட் முன் ஜாமீன் வழங்கிய நபரை, குஜராத் போலீசார் 4 நாட்கள் காவலில் அடைத்த விவகாரத்தில், குஜராத் காவல்துறையை சரமாரியாக விளாசியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
மோசடி வழக்கில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த துஷார்பாய் ரஜினிகாந்த்பாய் ஷா என்ற தொழிலபதிபருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டபோதிலும், தொழிலதிபர் துஷார் பாய், போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும், அவரிடம் இருந்து போலீசார் ரூ.1.65 கோடி பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை: இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் துஷார்பாய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி நான்கு நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பெஞ்ச், அந்த நபரை கைது செய்து காவலில் வைக்க வலியுறுத்தியதற்காக குஜராத் காவல்துறை மீது கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர், சூரத் போலீஸ் கமிஷனர், துணை போலீஸ் கமிஷனர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
நீதிபதிகள் காட்டம்: மேலும், "இது இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். அவரை எப்படி காவலில் எடுத்திருக்க முடியும்? விசாரணை அதிகாரி எப்படி காவலில் வைக்கத் துணிந்தார்? இது அபத்தமானது. விசாரணை அதிகாரி மற்றும் மாஜிஸ்திரேட் இதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். மாஜிஸ்திரேட்டுக்கும் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புவோம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை இவர்கள் கையாளும் விதம் இதுதானா?" என்று நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.
"ரிமாண்ட் கோரி மனு தாக்கல் செய்ததே நீதிமன்ற அவமதிப்பு தான். அதன் பிறகு அப்பட்டமான சட்டவிரோத காவலில் நான்கு நாட்கள் வைக்கப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் மற்றும் விசாரணை அதிகாரி நான்கு நாட்களுக்கு உள்ளே இருக்கட்டும், அப்போதுதான் அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்களின் பதில்களில் முறைகேடான சம்பவங்கள் கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் அனைவரையும் காவலில் எடுத்து சிறைக்கு அனுப்புமாறு காவல்துறை தலைமை இயக்குநரிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
"வரும்போது அவர்களை மூட்டை, முடிச்சு சாமான்களுடன் வரச் சொல்லுங்கள். அவர்கள் இங்கிருந்து எங்கு செல்கிறார்கள் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்" என்று பெஞ்ச் குறிப்பிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்களை அனுப்ப உத்தரவிட்டனர்.
சிசிடிவி காட்சி எங்கே?: குஜராத் மாநில அரசு மற்றும் அதன் காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு மன்னிப்பு கோரியபோது, இதை ஏற்கவே முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் போலீஸ் காவலில் இருந்த காலகட்டத்தின் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றம் கேட்டபோது, அந்த நாட்களில் அங்கிருந்த சிசிடிவி செயல்படவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
இதனால் கோபமான நீதிபதிகள், "இது எதிர்பார்க்கப்பட்டது தான். இது வேண்டுமென்றே நடத்தப்பட்டுள்ளது. சூரத் நாட்டின் மிகப்பெரிய வணிக மையமாக உள்ளது. ஆனால், அங்கு மட்டும் அந்த நான்கு நாட்களாக கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்திருக்கும். காவல் நிலைய நாட்குறிப்பில் துஷார் பாய் இருப்பை போலீசார் குறிக்காமல் விட்டிருப்பார்கள். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
இதை நம்பச் சொல்றீங்க?: சிசிடிவி ஏன் செயல்படவில்லை என்பதை விளக்க வேண்டும். எல்லா காவல் நிலையங்கள் மட்டுமின்றி அனைத்து விசாரணை நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. சூரத் உலகின் வைர தலைநகரம். ஆனால் அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்பதை நாங்கள் ஏற்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்" எனக் காட்டமாக கூறினர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications