Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் 21ல் சூரிய கிரகணம்தானே - உலகம் அழியப்போகுதுன்னு புரளி கிளப்புனது யாருப்பா

ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது அதைப்பற்றிய பயமே ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும் போது அந்த நாளில் உலகம் அழியப்போவதாக ஒரு செய்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாயன் காலண்டரை வைத்து ஏதாவது ஒரு செய்திகள் சமூக வலைத்தளங்களில் சூடாக விவாதிக்கப்படும். இப்போது லேட்டஸ்ட் ஆக பரவி வரும் தகவல் வரும் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்து விடும் என்பதுதான். மாயன் காலண்டரின் கடைசி நாள் ஜூன் 21ஆம் தேதி என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சம் உலக மக்களை ஒரு பக்கம் கொன்று கொண்டிருக்க இப்போது மாயன் காலண்டர் பற்றிய வதந்தியும் படு சூடாக பரவி வருகிறது. சூரிய கிரகணம்தான் 21ஆம் தேதி நிகழப்போகிறது இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு வதந்தி பரவியது ஏன் என்றுதான் தெரியவில்லை.

Recommended Video

    Mayan Calendar Prediction : வரும் 21ம் தேதியோடு உலகம் அழிகிறதா? மாயன் காலண்டர் சொல்வது உண்மைதானா?

    உலக அழிவைப்பற்றி அவ்வப்போது செய்திகள் பரவி வரும். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. அதே சமயத்தில் உலகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் எரிமலை வெடிக்கும், சுனாமி வரும், பூகம்பம், நில நடுக்கம் ஏற்பட்டு சில ஆயிரம் பேர் மரணமடைவார்கள்.

    அப்படித்தான் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்து விடும் என்ற தகவல் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியது பிறகு அது பொய்யானது. அதன் பிறகு எத்தனையோ நாடுகளில் இயற்கை சீற்றங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் உலகம் மொத்தமாக அழியும் அளவிற்கு ஊழி காலம் இன்னும் ஏற்படவில்லை. மாயன் காலண்டரை வைத்துதான் அவ்வப்போது இது போல செய்திகள் பரவி வருகின்றன.

    மாயன் காலண்டரின் கடைசி நாள்

    மாயன் காலண்டரின் கடைசி நாள்

    மாயன் இனத்தவர்கள் மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டவர்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த இனத்தவர்கள் வானியல் சாஸ்திரம் ஜோதிடத்தில் சிறந்தவர்கள். இயேசு கிருஸ்து பிறக்கும் முன்பே காலண்டரை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். இந்த காலண்டர் 5126 வருடங்களைக் கொண்டது. இந்த காலண்டரின் கடைசி நாள்தான் வரும் ஜூன் 21என சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

    மிதுனம் சூரிய கிரகணம்

    மிதுனம் சூரிய கிரகணம்

    வரும் 21ஆம் தேதி மிதுனம் ராசியில் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இது ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம். இந்த கிரகணத்தின் போது மிதுனம் ராசியில் சூரியன், சந்திரன், ராகு, புதன் என நான்கு கிரகங்கள் இணைகின்றன. கேதுவும் நேராக இந்த 4 கிரகங்களை பார்கிறது. இதனாலும் ஒருவித அச்சம் பரவி வருகிறது.

    சூரிய கிரகணத்தால் நோய் பாதிப்பு

    சூரிய கிரகணத்தால் நோய் பாதிப்பு

    கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ஆறு கிரகணங்கள் தனுசு ராசியில் இணைந்திருந்தன. இதனால் உலகத்திற்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்று ஜோதிடர்கள் கருத்துக்களை பதிவிட்டனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. இப்போது மீண்டும் ஒரு சூரிய கிரகணம் நிகழப்போவதால் வேறு ஏதேனும் பாதிப்பு வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் அது உண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் வீரியம் குறைய வாய்ப்பு உள்ளதாகவே கூறுகின்றனர்.

    உலகம் அழியாது நம்பாதீங்க

    உலகம் அழியாது நம்பாதீங்க

    உலகம் அழியப்போவதாக பல ஆண்டுகளாகவே வதந்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகம் சீக்கிரம் அழியம் என்று சுமேரியர்கள் சொன்னார்கள் அது நடக்கவில்லை. 2003 மற்றும் 2012ஆம் ஆண்டுகளிலும் உலகம் அழியம் என்று மாயன் காலண்டரை சொன்னார்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது 2020 ஜூன் 21ல் உலகம் அழியும் என்று சொல்வதும் உண்மையில்லை என்கிறார் நாசா விஞ்ஞானி. நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை... மக்களை எப்பவுமே பதற்றத்திலேயே வச்சிருக்காங்களே.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+