டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுனில் அரோரா ஓய்வு... இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்றுக்கொண்டார். 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிவரை தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார் சுஷில் சந்திரா.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து சுஷில் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம்,மேற்குவங்க மாநிலத்தில் நான்கு கட்ட வாக்குப்பதிவுகளை நடத்தி முடித்துள்ள சுனில் அரோரா நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

Sushil Chandra assumes charge as Chief Election Commissioner

அவருக்கு அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதே வழக்கம் என்பதன் அடிப்படையில், சுஷில் சந்திரா பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்புமகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. 7 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

சுஷில் சந்திரா தலைமையில், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. இதில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் ஆட்சிக் காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.

உத்தரபிரதேச மாநில சட்டசபையின் காலம் அடுத்தாண்டு மே 14ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிவரை தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார் சுஷில் சந்திரா.

English summary
Sushil Chandra assumed charge as the 24th Chief Election Commissioner on Tuesday. Chandra was appointed as the CEC on Monday, the day Sunil Arora demitted office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X