'அர்ப்பணிப்பு, சேவையின் சின்னம்'.. பிரதமர் மோடிக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்த அமித்ஷா!
டெல்லி: பிரதமர் மோடி இன்று 72-வது தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியை அர்ப்பணிப்பு, மற்றும் சேவையின் சின்னம் என்று வாழ்த்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் 15-வது பிரதமரான நரேந்திர மோடிக்கு இன்று 72-வது பிறந்த தினமாகும்.
கடந்த 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத்தின் வட்நகரில் நரேந்திர மோடி பிறந்தார்.
மோடி பிறந்தநாள்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த இந்தியாவின் முதல் பிரதமர் மோடியே ஆவார். கடந்த 2014- ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 2019- ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை சேவை தினமாக ஒவ்வொரு ஆண்டும் பாஜக கொண்டாடி வருகிறது. இதையொட்டி பல்வேறு நலத்திட்ட பணிகளை பாஜகவினர் செய்து வருகின்றனர்.

கொண்டாட்டம்
அதன்படி, நடப்பு ஆண்டில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை 2 வாரங்கள் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை பாஜக செய்துள்ளது. இந்த கொண்டாட்ட நாட்களில் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கட்சித்தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மோடிக்கு வாழ்த்து
பிரதமர் மோடியின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பிரதமர் மோடிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதால், டிவிட்டர் டிரெண்டிங்கிலும் மோடி பிறந்தநாள் தொடர்பான ஹேஸ்டேக்குகள் இடம் பிடித்துள்ளன.

அமித்ஷா வாழ்த்து
பிரதமர் மோடிக்கு அவரது அமைச்சரவை சகாக்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமித்ஷா இந்தியில் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- பாதுகாப்பான வலிமையான மற்றும் புதிய தற்சார்பு இந்தியாவை உருவாக்கியவரும் சேவை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக திகழ்கிறார்.

வலிமையான தலைமை
நாட்டில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் தலைவராகவும் பலருக்கு உத்வேகம் அளிப்பவராகவும் விளங்கும் பிரதமர் மோடிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழைகளில் நலன், நல்லாட்சி, வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் வரலாற்று சீர்திருத்தங்கள் என இணைந்த ஒருங்கிணைப்பு மூலம் உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை நிறுவும் தனது உறுதிப்பாட்டை பிரதமர் மோடி பூர்த்தி செய்துள்ளார். வலிமையான தலைமை மற்றும் அந்த தலைமையின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினால் மட்டுமே இது சாத்தியமானது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications