"நான் திராவிடன்.." லோக்சபாவில் அண்ணா பேசியதை, ஆவேசமாக நினைவுபடுத்திய டி.ஆர். பாலு!
டெல்லி: நான் ஒரு திராவிட நாட்டிலிருந்து வருகிறேன், நான் ஒரு திராவிடன் என கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் அண்ணா கூறியதை ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்து பேசியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது கூறுகையில், வாழ்க்கையில் எப்போதும், ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுடைய ஆளுகையை செலுத்த முடியாது.
நீங்கள் எந்தவொரு கற்பனையில் இருந்தாலும் உங்களால் இந்திய மக்கள் மீது எப்போதும் ஒருபோதும் ஆளுகையை செலுத்த முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் மனங்களில் தமிழ்நாட்டுச் சிந்தனை உள்ளது. தமிழ் மொழி பற்றிய சிந்தனை உள்ளது. பிறகு அவர்களுக்கு இந்தியா பற்றிய சிந்தனையும் உள்ளது.

கேரளா
இதில் நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கேரளா மக்களுக்கும் ஒரு கலாசாரம் உண்டு. நானும் கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்வானவன். அதனால் அதை உணர்கிறேன். தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்றவற்றின் மக்களிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் கூட இதை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என பேசியிருந்தார்.

திராவிடன்
இதையடுத்து திமுக எம்பி டி.ஆர். பாலு கூறுகையில் நாளை (பிப்.3) அண்ணா நினைவு தினம் வரும் வேளையில் அவர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த போது பேசியதை இங்கே பதிவு செய்கிறேன். "நான் ஒரு திராவிட நாட்டில் இருந்து வருகிறேன். நான் ஒரு திராவிடன் என கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

மராத்தியர்
இப்படி சொல்வதால் நான் குஜராத்திற்கோ மராத்தியருக்கோ வங்காளருக்கோ எதிரானவன் இல்லை. திராவிடன் என நான் ஏன் சொல்கிறேன் என்றால் அதனுள் ஏதோ ஒன்று வித்தியாசமாக, தனித்துவமாக உறுதியாக உள்ளது." இதை கூறிய முன்னாள் முதல்வர் அண்ணாவை எப்போதும் மறக்க முடியாது" என்றார் டி.ஆர். பாலு.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
திராவிடம் என்றால் என்ன என்பது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகள் பேசி வருகிறார்கள் என தெரிவித்திருந்தார். அது போல் தனது ட்விட்டர் பக்கத்திலும் திரவீடியன் ஸ்டாக் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications