எனக்கு தந்தை போன்றவர்.. வாஜ்பாயை மத்திய அரசு மறந்துவிட்டதா?.. டி.ஆர். பாலு நறுக் கேள்வி
டெல்லி: சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்த வாஜ்பாயை மத்திய அரசு மறந்துவிட்டதா என திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று திமுக எம்பி டிஆர் பாலு பேசுகையில் வாஜ்பாய் எனக்கு தந்தை போன்றவர். அவரை போன்ர ஒரு தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை.

பட்ஜெட்டில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்தவிதமான குறிப்பும் இடம்பெறவில்லை. அரசு அந்த திட்டத்தை மறந்துவிட்டதா அல்லது வாஜ்பாயையே மறந்துவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எழுப்பியது. அப்போது பேசிய திருச்சி சிவா, நீட் தேர்வால் கிராமப்புற பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறக் கூடிய சூழல் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து மக்களவையிலும் எதிரொலித்தது.
அப்போது நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது ஏன் என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் இதற்கு பதில் ஏதும் சொல்லாததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications