ஆஹா! இது செம கண்டுபிடிப்பு.. ஆனந்த் மகிந்திராவே அசந்து போன டி ஷர்ட்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
டெல்லி: குழந்தைகள் நீரில் தவறி விழுந்தாலும் காப்பாற்றும் வகையிலான டி ஷர்ட் ஒன்றை பிரான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்த வீடியோவை தனது ட்விட் பதிவில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா, நோபல் பரிசை விட மேலான கண்டுபிடிப்பு இது என பதிவிட்டுள்ளார்.
நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. வாகன உற்பத்தி தொடங்கி பல துறைகளில் சாதனை படைத்து முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். நாட்டின் மிகப்பெரும் தொழில் அதிபர் என்பதை தாண்டி தனது சமூக வலைதளத்தில் மிகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவை துணுக்குகளையும் பதிவிட்டு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு ட்விட்டரில் பிரபலமாக இருக்கிறார்.

எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள், தான் கண்டு வியந்து பார்த்த இடங்கள் விஷயங்கள் குறித்து ஆனந்த் மகிந்திரா தனது ட்விட் பதிவில் பதிவிட்டு வருகிறார். அது குறித்த தனது கருத்தையும் ஆனந்த் மகிந்திரா பதிவிடுவதுண்டு. ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆனந்த் மகிந்திராவை ஃபாலோ செய்கின்றனர்.
ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விட்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவும். அந்த வகையில் அண்மையில் ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட ஒரு ட்விட் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது குழந்தைகள் நீரில் தவறி விழுந்து விட்டால், உயிர் தப்பிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று டி சார்ட் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த டி ஷர்ட் அணிந்து இருந்தால் நீரில் மூழ்கினாலும் லைப் ஜாக்கெட் போல மாறி மிதக்க தொடங்கும். இதனால், குழந்தைகள் நீரில் மூழ்கி இறப்பது முற்றிலும் தவிர்க்கப்படும். இது பற்றிய வீடியோவை பதிவிவிட்டு இருக்கும் ஆனந்த மகிந்திரா, இந்த கண்டுபிடிப்பிற்கு நோபல் கிடைக்காமல் போகலாம். ஆனால், நோபல் பரிசை விட இது உயர்ந்த கண்டுபிடிப்பு என நான் கருதுகிறேன். இரண்டு பேரக் குழந்தைகள் எனக்கு உள்ளனர்.
அவர்களின் நலனும் பாதுகாப்புக்கும் தான் முன்னுரிமை கொடுப்பேன். எனவே இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த டிவிட் இணையதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சுமார் 10 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
This may not get a Nobel prize but it ranks higher than those inventions for me. Because as the grandfather of two young kids, their wellbeing & safety is my highest priority. 👏🏽👏🏽👏🏽 (video credit: @Rainmaker1973 ) pic.twitter.com/ZaSyVMqZG9
— anand mahindra (@anandmahindra) May 25, 2023
நெட்டிசன் ஒருவர் கூறும் போது, "இது மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. எனது நண்பர் ஒருவரின் 3 வயது மகன் நீரில் மூழ்கி இறந்து விட்டான். அந்த நீச்சல் குளம் இடுப்பளவு தண்ணீர் கொண்டதுதான். ஆனாலும் குழந்தை என்பதால் இந்த துயரம் நடந்து விட்டது. அதுபோன்ற தருணத்தில் மிகுந்த பயனளிப்பதாக இந்த கண்டுபிடிப்பு இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications