"அதெல்லாம் பழைய இந்தியா".. நெஞ்சை நிமிர்த்தி நின்ற பதான்.. ஷமிக்கு ஆதரவாக கொந்தளிப்பு.. பரபர கருத்து
டெல்லி: இந்திய வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக இர்பான் பதான் கோபமாக ட்விட் செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்வியை பல இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து இந்திய அணியின் தோல்விக்கு பவுலர் முகமது ஷமியை நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஷமியை மத ரீதியாக தாக்கி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஷமியை துரோகி என்று கூறி நெட்டிசன்கள் அருவருப்பாக கமெண்ட் செய்து வருகின்றன. இந்திய அணியின் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடவில்லை என்றாலும் ஷமியை மட்டும் குறி வைத்து மதத்தை காரணம் காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆதரவு
இந்த நிலையில் ஷமிக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நாங்கள் இந்திய அணியை ஆதரிக்கிறோம். இந்திய அணியில் ஆடும் எல்லோரையும் ஆதரிக்கிறோம். ஷமி சிறந்த வீரர். மற்ற விளையாட்டு வீரர்கள் போலவே அவரும் ஒருநாள் சரியாக ஆடவில்லை. நான் அவருடனும், இந்திய அணியுடனும் நிற்கிறேன், என்று சச்சின் டெண்டுல்கர் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராகுல்
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி முகமது ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி செய்துள்ள ட்விட்டில், முகமது ஷமி நாங்கள் எல்லோரும் உன்னுடன் இருக்கிறோம். இவர்கள் எல்லோரும் வெறுப்பு நிரம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு யாரும் அன்பை அளிக்கவில்லை. இதனால் அவர்களை மன்னித்துவிடுங்கள்.. என்று ஷமியிடம் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஷமியை மோசமாக விமர்சிக்கும் நபர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை.. அவர்கள் வெறுப்பால் நிரப்பப்பட்டு இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சேவாக்
ஷமிக்கு ஆதரவாக ராகுல் காந்தி செய்து இருக்கும் இந்த ட்விட் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ராகுல் காந்தி கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் சேவாக் செய்துள்ள ட்விட்டில், ஷமிக்கு எதிராக தொடுக்கப்படும் ஆன்லைன் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் அவருடன் இருக்கிறோம். அவர் ஒரு சாம்பியன். இந்திய அணியின் கேப்பை அணியும் எவரும் தனது இதயத்தில் இந்தியாவைத்தான் சுமந்து இருப்பார். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ஷமி.. என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

பதான்
இர்பான் பதான் தெரிவித்த கருத்தில், இதற்கு முன் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்த போட்டிகளில் நானும் கூட ஆடி இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் என்னை பாகிஸ்தான் போக சொல்லவில்லை. அது பழைய இந்தியா. இப்போது நடக்கும் இந்த அசிங்கம் உடனே நிறுத்தப்பட வேண்டும், என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார். பதானின் இந்த ட்வீட் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications