பாகிஸ்தானுடன் பேசுவதால்.. இந்தியாவுக்கு ஒன்னும் பாதிப்பு வராது! உத்தரவாதம் கொடுத்த அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருக்கமாக இருப்பது இந்தியாவுக்கு தொடர்ந்து உறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து அமெரிக்கா தெளிவுப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா டுடே செய்தி ஊடகத்திற்கு மும்பையின் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நேர்காணல் கொடுத்திருக்கிறார்.

Pakistan

அப்போது அவர் பேசுகையில், "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் போராட்டத்திற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கிறது. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான இந்தியாவுக்கு இருக்கும் கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கமான இரு தரப்பு உறவுகள்.. எந்த காரணத்தாலும் இந்தியாவுடனான உறவை அல்லது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதிக்காது.

அமெரிக்காவின் உலகளாவிய நலன்களுக்காக, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் உறவை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது.. பல்வேறு முக்கிய விவகாரங்களில் அவர்கள் எடுக்கும் முடிவுகளில், அமெரிக்கா கூடுதல் செல்வாக்கு செலுத்த உதவும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் ஒரு போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலை குறைத்து, அமைதியை ஏற்படுத்துவோம். மோதல்களை தீவிர படுத்தாமல் தடுக்கவும், ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவே அமெரிக்கா தயாராக உள்ளது. இருநாடுகளுக்கும் எல்லை தகராறுகளை தவிர்த்து, வர்த்தகம் மற்றும் வணிகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

உலகில் பயங்கரவாத ஒழிப்பிற்கு அமெரிக்காவை விட அதிகமாக எந்த நாடும் பங்களிப்பு செய்யவில்லை. அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் வீழ்த்தப்பட்டது மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு செயல்பாடுகளே இதற்கு உதாரணம். ஒட்டுமொத்தமாக இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் வலுவாக இருக்கின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் உறவு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம்" என தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+