டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜக தலைவர் யாரப்பா... தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. கடும் போட்டியில் 4 தலைவர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. போட்டியில் 4 தலைவர்கள்!- வீடியோ

    டெல்லி: நாடு முழுவதும் பாஜக உள்கட்சி தேர்தல் வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் தொடங்கும் நிலையில் மாநில தலைவர்கள் டிசம்பர் 1 முதல் 15ம் தேதிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைவர் பதவியை பிடிக்க தமிழகத்தில் கடும் போட்டி நிலவுகிறது.

    பாஜக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராதா மோகன் சிங் தலைமையிலான பாஜக தேசிய தேர்தல் குழு, நேற்று டெல்லியில் கூடி உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது.

    இதன்படி செப்டம்பர் 1ம் தேதி உள்கட்சி தேர்தல் தொடங்குகிறது. இதில் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றம் அதன் தலைவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இங்கிட்டு பாக்... அங்கிட்டு சீனா.. தெரிந்தே நெருப்பில் கைகளை சுட்டுக் கொண்ட மத்திய அரசு.. காங். இங்கிட்டு பாக்... அங்கிட்டு சீனா.. தெரிந்தே நெருப்பில் கைகளை சுட்டுக் கொண்ட மத்திய அரசு.. காங்.

    மாவட்ட அளவில் தேர்தல்

    மாவட்ட அளவில் தேர்தல்

    இதன்பின்னர் மண்டல அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான தேர்தல் முறையே அக்டோபர் 11 முதல் 31ம் தேதிக்குள்ளும், நவம்பர் 1ம்தேதி முதல் நவம்பர் 11ம் தேதிக்குள் மீண்டும் தேர்தல் நடக்கும்.

    தேசிய கவுன்சில்

    தேசிய கவுன்சில்

    பின்னர் மாநில தலைவர்கள் தேர்தல் டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம்தேதி வரை நடக்கும். இதன் பின்னர் தேசிய கவுன்சில் அமைக்கப்படும். தேசிய கவுன்சில் கூடி புதிய தலைவரை தேர்வு செய்யும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ஜேபி நட்டா தேர்வாகிறார்

    ஜேபி நட்டா தேர்வாகிறார்

    இதனிடையே உள்துறை அமைச்சராகிவிட்ட அமித்ஷாவுக்கு பதில் ஜேபி நட்டா புதிய தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது ஜேபி நட்டா செயல்தலைவராகவும், அமித்ஷா தலைவராகவும் உள்ளார்கள்.

    சிபிஆர்- வானதி- நயினார்

    சிபிஆர்- வானதி- நயினார்

    தமிழகத்தில் புதிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இப்பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதில் யார் தலைவர் பதவியை கைப்பற்றுவார்கள் என்பது குறித்து தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    English summary
    Tamil Nadu BJP leader election date announced, 4 bjp leaders try to get post
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X