டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு ஏன்? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட தகவல்!
டெல்லி: டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த பின்னர் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்த நிலையில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் உள்ளிட்டோர் கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்தனர். டெல்லியில் நேற்று மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று விஸ்தாரா விமானத்தில் டெல்லி சென்றார். 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி, ராஜ்பவன் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் ஆளுநர் ரவி சந்தித்தார். "தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறுபான்மையினர் மீது அமைச்சர் கிரண் ரிஜிஜுகாட்டும் அக்கறை பாராட்டுக்குரியது மற்றும் ஊக்கமளிக்கிறது என இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications