தண்ணீர் தர மனுசு இல்லை.. உச்சநீதிமன்றத்திற்கு போன கர்நாடகா! தமிழக அரசு விடலையே! பதில் மனு தாக்கல்
டெல்லி: நேற்று டெல்லியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆக.12 முதல் தமிழகத்திற்கு தினமும் நாளொன்றுக்கு 1 டிஎம்சி என.. 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்திருக்கிறது. இருப்பினும் கர்நாடக அரசின் மனுவை ஏற்க கூடாது என.. தமிழ்நாடு அரச பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை என காவிரி நீர் பாயும் மாவட்டங்கள் அனைத்தும் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதற்க காரணம் கர்நாடக அரசு தண்ணீரை திறக்காததுதான். இப்படி இருக்கையில் நேற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொடுத்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

காவிரி நீர் பிரச்சனை
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் வந்தால்தான் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடகா தண்ணீர தர முடியாது என்று ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்கிறது. எனவே இந்த ஆண்டு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை தமிழக அரசு, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் கொண்டு சென்றது. நிலைமையை ஆய்வு செய்த குழு, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சொன்னது. ஆனாலும் கர்நாடகா காது கொடுக்கவில்லை. இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது என்பதை தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் போனது. அங்கேயும் நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்தது.
நேற்று டெல்லியில் ஆணையத்தின் அவசரக்கூட்டம் அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆக.12 முதல் தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கொடுக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
நீ எவ்வளவு உத்தரவு வேணாலும் போட்டுக்கோ.. என்னால தண்ணிய தொறக்க முடியாது.. என்று விடாப்பிடியாக இருக்கும் கர்நாடாக, இந்த விஷயம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று அவசர மனுவை தாக்கல் செய்திருந்தது. நம்ம விடுவோமா? தமிழக அரசும் உச்சநீதிமன்றதில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
அதில், கர்நாடகாவின் அணைகளில் போதுமான நீர் இருந்தும், பருவமழை போதுமான அளவில் பெய்தும், பெங்களூருக்கு தேவையான அளவுக்கு குடிநீர் இருந்தும் கூட.. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடகா செயல்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் கர்நாடகாவின் உண்மைக்கு புறம்பான அவசர மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
