காவிரி: கர்நாடகா தர வேண்டியது 53 டிஎம்சி- வந்தது 15 டிஎம்சி.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்கு!
டெல்லி: காவிரியில் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு 53 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் வெறும் 15 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா எவ்வளவு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பது ஏற்கனவே வரையறை செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 9-ந் தேதி வரை கர்நாடகா அரசு, காவிரியில் 53 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெறும் 15 டி.எம்.சி. நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டிருந்தது.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் இதனை தமிழ்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். தமிழ்நாட்டுக்கு காவிரியில் தரப்பட வேண்டிய 37.9 டிஎம்சி நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படாததால் காவிரி ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வெளிநடப்பும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரின் அளவை கர்நாடகாவை முழுமையாக திறந்துவிடவில்லை. காவிரி ஆணையமும் இதற்கான உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதனால் காவிரி டெல்டாவில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய எஞ்சிய 37.9 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications