காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு!
டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் உரிய நீர் வழங்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து விட வேண்டிய நீர் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், கர்நாடகா - தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. தமிழகத்துக்குரிய நீரை கர்நாடகா திறந்து விடுவதில்லை. உச்ச நீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டும், நீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. போதிய நீர்வரத்து இருக்கும்போதோ அல்ல
து அணைகள் நிரம்பி வழியும் போது மட்டுமே தண்ணீரை திறக்கிறது கர்நாடகா. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் 4 முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.
நடப்பு 2026- 2027 பாசன ஆண்டில் விகிதாச்சாரப் பங்கீட்டின்படி நீர் திறந்துவிடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கடந்த 9 ஆம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளில் 61.944 டி.எம்.சி நீர் உள்ளது. தமிழகத்திற்கான நீர் பற்றாக்குறை என்பது 64.25% - 60.229 டி.எம்.சி என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் 35 முதல் 30 நாட்கள் பாசனத்துக்கு மட்டுமே போதுமானதாகும், தமிழ்நாட்டின் சூழலை காவிரி மேலாண்மை ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நதியின் நீரை நம்பி, 25 லட்சம் ஏக்கர் நிலம் பாசனப் பரப்பாக உள்ளது. கடந்த ஜூனில் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படாததால், குறுவை பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது
கடந்த 1 ஆம் தேதி தான், மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது அணையில் மிகக் குறைந்த அளவு நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இது, அடுத்த 25-30 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு போதுமானதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதிய நீர் கிடைக்காததால் சாகுபடி செய்ய இயலாத சூழல் உருவாகியுள்ளது. இது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன், மாநிலத்தின் விவசாய பொருளாதாரத்தில் கடுமையான பேரழிவை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 - செப்., 9 வரை, பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய, 16.01 டி.எம்.சி., நிலுவை நீரை கர்நாடகா உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா தவறாமல் பின்பற்றுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். கடந்த 8 ஆம் தேதி, ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 6,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும்
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவை நீரை ஈடுகட்டும் வகையிலும், பிலிகுண்டுலுவில் இருந்து தமிழகத்துக்கு விகிதாசார அடிப்படையில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தும்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வலுவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
