ஒன்னுமே புரியல.. 100 நாள் வேலை திட்டத்திற்கு சமஸ்கிருத பெயர்! மக்களவையில் தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாத்மா காந்தி 100 வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' என சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று, தமிழக எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
திமுக எம்பி செல்வகணபதி மற்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் தமிழ்நாட்டின் மீது சமஸ்கிருதம், இந்தியை திணிக்க வேண்டாம் என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் ஒன்னுமே புரியவில்லை என்று சாடியுள்ள ஜோதிமணி, சமஸ்கிருதம் அல்லது இந்தியில் திட்டங்களின் பெயர் வைக்க காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.













Click it and Unblock the Notifications