இந்தியாவின் வளர்ந்த மாநிலங்கள் லிஸ்ட்.. 3-வது இடத்தில் தமிழ்நாடு.. தனிநபர் வருமானத்திலும் அசத்தல்
டெல்லி: ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில்
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் தனிநபர் வருமானத்திலும் தமிழகம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். நாட்டின் தேவைக்கு ஏற்ற பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் வளர்ந்த நாடுகளாகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யாமல், வெளிநாட்டில் உற்பத்தி செய்ததை இறக்குமதி செய்தால், இந்த நாட்டில் இருந்து பணம் வெளியேறும் என்பதுடன், நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் பறிபோகும். எனவே அந்நாட்டு எல்லா துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவே விரும்பும். இந்த கணக்கீட்டை சுருக்கமாக சொல்வது என்றால், ஜி.டி.பி. என்று கூறுவார்கள்.
அந்த வகையில் உலக அளவில் பார்த்தால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தை அதிகரிக்க மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்களில் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான திட்டங்களை வகுக்கவும், நிதி ஒதுக்கீட்டை திறம்பட மேம்படுத்தவும், மாநிலங்களின் கடன் வாங்கும் திறனைஅதிகரிக்கவும் முடியும். உள்நாட்டு உற்பத்தி குறைந்தால் வரி குறையும். அரசு கடும் நிதிநெருக்கடிக்கு தள்ளப்படும்.. அதேபோல் அனைத்து துறைகளிலும் பரவலான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்தால் தான் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் கவனமாக இருக்கும்.
ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 1961-ம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023-24-ம் நிதியாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக எப்படி உள்ளது? என்ற விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சஞ்சீவ் சன்யால் (பொருளாதார மேதை), ஆகன்க்ஷா அரோரா (நிதி ஆயோக் துணை இயக்குனர்) ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு இந்த மாதம் (செப்டம்பர்) மத்திய அரசிடம் அளித்திருக்கிறார்கள்.
2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அளித்திருப்பது அறிக்கையில் தெரிய வந்துள்ளது. தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில் தேசிய சராசரியை ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில், 'தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 3-வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலம் 13.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 9.7 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், தமிழகம் 8.9 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.
அதேநேரம் 1991-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு இப்போது இருப்பது இருந்தது இல்லை.. ஆனால் 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களும் சராசரி வளர்ச்சியை எட்டி இருக்கின்றன. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பின்னடைவை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, 1961-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தென்மாநிலங்கள், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. வடமாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஹரியானாவில் மிக அதிகமாக உள்ளன. தனிநபர் வருமானம் என்பது பீகாரில் மிகக் குறைவாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி, டெல்லியின் தனிநபர் வருமானம் 250.8 சதவீதமாக இருக்கிறது. இது சராசரி வருமானம் நாட்டின் சராசரியை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
தெற்கில், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகியவை 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுத்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கர்நாடகாவின் பங்கு 2000-01ல் 6.2 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் ஆனால் 1960-61ல் 5.4 சதவீதமாக மட்டுமே இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications