உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2-வது பெண் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடந்த் கொலீஜியம் கூட்டத்தில், வி மோகனா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

V Mohana Supreme Court Collegium Woman Judge

கொலிஜியம் பரிந்துரை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கொலிஜியம் கூட்டத்தில் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சேகர், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பாலி மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி மோகனா ஆகிய 5 பேரை நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர்

இதில் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் வி மோகனா, தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்தவர். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார். வி மோகனா நீதிபதியாக பொறுபேற்கும்பட்சத்தில் தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2 வது பெண் நீதிபதி என்ற பெருமையை பெறுவார். மோகனா தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி கே விஸ்வநாதனுடன் ஒரே கல்லூரியில் பயின்றவர்.

யார் இந்த மோகனா?

கோவையை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் வி. மோகனா, சட்டத் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். கோவை அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 1988-ம் ஆண்டு சட்டம் பயின்றார். நம் நாட்டின் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் சட்டம் பயின்றார்.

உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய மற்றும் சிக்கலான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். கபில் சிபல், கே.கே. வேணுகோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டுள்ளார் மோகனா. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இவர் மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட இவருடைய பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2-வது பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை மோகனா பெறுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+