டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது விதிமீறல் - உள்துறை அமைச்சகம்

Google Oneindia Tamil News

டெல்லி: தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கையில் பார்வையாளர்களை அனுமதி அளித்த தமிழக அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு குறித்து டிசம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது - தமிழக அரசுக்கு குட்டு வைத்த மத்திய அரசு..!

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் நவம்பர் மாதம் 50 சதவிகிதம் பேர் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது.

    Tamil Nadu to allow 100% of the audience in theaters Union Home Ministry

    தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் தியேட்டர்கள் பக்கம் செல்ல விரும்பவில்லை.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள் சினிமா தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்தாலும் டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பாக அமைந்து விடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.

    Tamil Nadu to allow 100% of the audience in theaters Union Home Ministry

    இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு விதிமீறல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் புதிய உத்தரவை பிறப்பிக் வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக தலைமை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    தியேட்டரில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. பள்ளிகளை திறக்கவில்லையே ஏன்? அமைச்சர் கொடுத்த செம விளக்கம் தியேட்டரில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. பள்ளிகளை திறக்கவில்லையே ஏன்? அமைச்சர் கொடுத்த செம விளக்கம்

    தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா எழுதிய கடிதத்தில், தமிழக அரசின் புதிய உத்தரவு திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது.

    கொரோனா தடுப்பு குறித்து டிசம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The Union Home Ministry has said that the order of the Tamil Nadu government to allow spectators to be 100 per cent in theaters should be withdrawn. A letter has been written to the Chief Secretary of the State of Tamil Nadu on behalf of the Home Ministry in this regard.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X