கடும் விலை சரிவு.. கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பெரும் இழப்பை சந்திக்கும் 5 மாநிலங்கள்!
டெல்லி: கச்சா எண்ணெய் தேவை குறைவு மற்றும் விலை சரிவு காரணமாக இந்தியாவில் 5 மாநிலங்கள் மிக மோசமான இழப்பை சந்தித்து உள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெய் சரிவால் பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. லாக்டவுன் காரணமாக வாகனங்கள் இயங்காதது, எண்ணெய் தேவை குறைந்து போனதுதான் இதற்கு காரணம் ஆகும்.

தற்போது இந்த சரிவு இந்தியாவையும் பாதித்து இருக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் எண்ணெய்களில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏப்ரல் மாதம் 15-18 டாலர் சரிந்தது.
அதன்பின் மே மாதம் இந்த விலை 30 டாலர் சரிந்தது. பின் ஜூன் மாதம் இந்த விலை 40 டாலர் சரிந்தது . அதிலும் எண்ணெய் அதிகம் எடுக்கப்படும் ராஜஸ்தான், குஜராத், அசாம் ஆகிய மாநிலங்கள் அதிக சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் இந்த மாநிலங்கள் கச்சா எண்ணெய் வருவாயில் ஷேர் அளிக்கும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ராஜஸ்தான் மாநிலம் மட்டும் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் வெறும் 250 கோடி ரூபாய் மட்டுமே இதில் வருவாய் ஈட்டி உள்ளது. கடந்த வருடம் இந்த நிறுவனங்கள் 1000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அதற்கு அப்படியே மொத்தமாக சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கான ஷேரும் குறைந்துள்ளது.
இதனால் தற்போது ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்கும் நிலைக்கு சென்றுள்ளது. வெளிநாடுகளில் கடன் வாங்கும் நிலைக்கு இந்த மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளது. 5000 கோடி ரூபாய் வரை இதனால் இந்த ஐந்து மாநிலங்களும் இழப்பை சந்திக்கும் என்கிறார்கள்.
வரும் நாட்களில் இந்த மாநிலங்கள் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக மேலும் பொருளாதார ரீதியாக சரிவை சந்திக்கும் என்கிறார்கள்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications