ஒரே ஒரு தமிழரின் பவர்.. 1 மணி நேரத்தில் ரூ.26,800 கோடியை இழந்த டாடா குழுமம்! எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து என். சந்திரசேகரன் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த முடிவைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் டாடா குழுமப் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் ரூ. 26,800 கோடிக்கும் அதிகமாகச் சரிவைக் கண்டுள்ளது.

தமிழரான என். சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை அவர் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார்.

Tata Sons

பங்குச் சந்தையில் கடும் அதிர்வலைகள்

சந்திரசேகரனின் விலகல் செய்தி வெளியானதும், பங்குச் சந்தையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. ரசாயனம், மோட்டார் வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள், சில்லறை வர்த்தகம், ஹாஸ்ப்பிடலாட்டி மற்றும் சுற்றுலா எனப் பல்வேறு துறைகளில் பரந்து விரிந்துள்ள டாடா குழும நிறுவனங்கள் இந்தச் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

பங்குச் சந்தை வர்த்தகத்தின் போது, டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு மதிப்பு அதிகபட்சமாக 4.8 சதவீதம் வரை சரிந்தது.

மேலும், குழுமத்தின் பிற நிறுவனங்களான:

தேஜாஸ் நெட்வொர்க்ஸ் - 2.84% சரிவு
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (- 2.8% சரிவு
டாடா எல்க்ஸி - 2.58% சரிவு
டாடா ஸ்டீல் - 2.02% சரிவு
டாடா கம்யூனிகேஷன்ஸ்- 1.62% சரிவு
டாடா இன்வெஸ்ட்மென்ட்ஸ் - 1.68% சரிவு
இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பனி- 1.51% சரிவு
டாடா பவர் - 1.32% சரிவு
டாடா டெலிசர்வீசஸ் - 1.24% சரிவு
டிரென்ட் - 0.55% சரிவு

எனப் பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிவைக் கண்டன.

சில நிறுவனங்கள் சிறிதளவு உயர்வு

பெரும்பாலான பங்குகள் சரிவைச் சந்தித்த போதிலும், ஒரு சில டாடா நிறுவனங்களின் பங்குகள் லேசான உயர்வைப் பதிவு செய்தன. டாடா கெமிக்கல்ஸ் பங்கு 0.91 சதவீதம் உயர்ந்தது. டாடா கேபிட்டல் (Tata Capital) 0.38 சதவீதமும், வோல்டாஸ் 0.16 சதவீதமும் சிறு ஏற்றத்தைக் கண்டன.

சந்திரசேகரன் விலக பின்னணி என்ன?

தம்முடைய இந்த முடிவு குறித்து என். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பதவி விலகலுக்கான முக்கிய காரணத்தை விளக்கிக் கூறியுள்ளார்.

அவரது பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாடா சன்ஸ் இயக்குநர் குழுவின் ஒரு உறுப்பினர் ஆதரவு தெரிவிக்காததே தமது இந்த முடிவுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரு டிரஸ்ட்டுகளும் சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகப் பரிந்துரைத்தன. இந்தப் பரிந்துரையை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழுவும் (இயக்குநர் குழுவும் ஏற்றுக்கொண்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இயக்குநர் குழுவின் உறுப்பினர் ஒருவர் இதற்கு ஆதரவு அளிக்காததால், அத்தீர்மானம் நிறைவேறாமல் போனது. முழுமையான ஆதரவு இல்லாத நிலையில், இந்த முடிவைத் தள்ளிவைக்க நான் தீர்மானித்தேன் என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தெளிவான தலைமை தேவை

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு ஆறு மாதங்கள் கடந்த பின்னரும், இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகரன், டாடா சன்ஸ் ஒரு மிகப்பெரிய நிறுவனம் என்றும், தற்போது பல முக்கிய திட்டங்கள் செயல்படும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரிசு அல்லது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியை இயக்குநர் குழு விரைவில் முடித்து, அதிகார மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் சந்திரசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

40 ஆண்டுகால டாடா பயணம்

என். சந்திரசேகரன் டாடா குழுமத்துடன் சுமார் 40 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார். 1987-இல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ஒரு சாதாரண பயிற்சிப் பணியாளராகச் சேர்ந்த அவர், உழைப்பால் உயர்ந்து 2009-இல் அதே TCS நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து, 2017 ஜனவரி முதல் டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். 2027 பிப்ரவரியில் இவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு வர்த்தக உலகில் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+