இதுதான் ஆனந்த் மகேந்திரா! இந்தியாவால் முடியாதுனு சொன்ன சாட் ஜிபிடி ஓனர்! சேலஞ்சை ஏற்ற டெக் மகேந்திரா
டெல்லி: சாட் ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளை இந்திய நிறுவனங்களால் உருவாக்க முடியாது என்று அதை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு டெக் மகேந்திரா சிஇஓ பதிலடி கொடுத்துள்ளார்.
பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் படுவேகமாக வளர்ச்சியடையும். கணினி, மொபைல் எனக் கடந்த காலங்களில் இதில் நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
அதன்படி இந்த காலம் என்பது ஏஐ தொழில்நுட்பத்திற்குச் சொந்தமானது. உலகில் இப்போது அதிக மாற்றம் இந்த ஏஐ துறையில் தான் நடக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து கோடீஸ்வரர்களும் ஏஐ துறையில் மிகப் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பம்: இது அத்தனையும் தொடங்கி வைத்தது எது என்று கேட்டீர்கள் என்றால் அது சாட் ஜிபிடி.. நாம் பார்க்கும் முதல் ஏஐ கருவி இந்த சாட் ஜிபிடி இல்லை. அதேநேரம் இந்தளவுக்கு ஒரு வலிமையான ஏஐ கருவியைப் பார்த்ததே இல்லை என்றே சொல்ல வேண்டும். பல கோடி டேட்டாக்கள் இதில் செலுத்தப்பட்டுள்ளன. இதனால் நாம் எந்தவொரு கேள்வியை கேட்டாலும் அதற்கு சாட் ஜிபிடி துல்லியமான பதிலைத் தரும்.
இது மட்டுமின்றி கடினமான தேர்வுகளைக் கூட சாட் ஜிபிடி ஈஸிாக க்ளியர் செய்கிறதாம். சட்டம், கணிதம் தொடர்பான எக்ஸாம் பேப்பர்களை சாட் ஜிபிடி அசாட்லாக க்ளியர் செய்துள்ளது. அது மட்டுமின்றி நீங்கள் ஜோக் கேட்டால் ஜோக் சொல்லும், காதல் கடிதம் கேட்டால் அதைக் கூட எழுதிக் கொடுக்கும். அந்தளவுக்கு சாட் ஜிபிடி ஒரு வலிமையான கருவியாகவே இருக்கிறது. இதனால் சாட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஆபத்து: மேலும், சாட் ஜிபிடிக்கு கிடைத்த வெற்றி மற்ற ஏஐ நிறுவனங்களுக்கும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் அவர்களுக்கும் ஆய்வுக்கு அதிக முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் மனிதர்கள் வாழும் முறையே மாறும் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ஏஐ தொழில்நுட்பம் மிகப் பெரிய அழிவுக்கு வித்திடும் என்றும் மாபெரும் வேலையிழப்பை இது நிச்சயம் ஏற்படுத்தும் என மற்றொரு தரப்பினர் எச்சரிக்கிறார்கள். இருப்பினும், சாம் ஆல்ட்மேன் இதில் இருந்து சற்று மாறுபடுகிறார்.
அதாவது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும் கீழ்நிலை வேலைகள் தான் இதனால் பறிபோகும் என்றும் அதிக ஊதியம் தரும் பல வேலைகள் புதிதாகவே உருவாகும் என்று சாம் ஆல்ட்மேன் தெரிவித்திருந்தார். மேலும், அவர் ஏஐ குறித்து விளக்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியையும் சந்தித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சொன்ன கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியது.
சாம் ஆல்ட்மேன்: அதாவது புதிய முன்னாள் கூகுள் இந்தியாவின் தலைவர் ராஜன் ஆனந்தன், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சாட்ஜிபிடியை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு சாம் ஆல்ட்மேன், "இந்த விவகாரத்தில் எங்களுடன் போட்டிப் போட முடியாது. முயன்றாலும் அது தேவையற்ற முயற்சி தான்.. வேண்டுமென்றால் நீங்கள் முயன்று பார்க்கலாம். இருப்பினும், அது சாத்தியமில்லாத ஒன்றுதான்" என்றார்.
இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்திய நிறுவனங்களால் முடியாது எனச் சொல்ல அவர் யார் எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திரா இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
டெக் மகேந்திரா: இது குறித்து டெக் மகேந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி தனது ட்விட்டரில், "இந்திய நிறுவனங்கள் அவர்களுடன் போட்டியிட முயல்வது வீண் என்று ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியிருந்தார். டியர் சாம், ஒரு சிஇஓவாக இருக்கும் உங்களிடம் மற்றொரு சிஇஓவாக நான் சொல்கிறேன்.. இந்த சவாலை நாங்கள் ஏற்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதுவரை ஏஐ தொழில்நுட்பம் என்றால் அது அமெரிக்க நிறுவனங்களாக மட்டுமே இருக்கும் என்று அனைவரும் நினைத்து வந்தனர். இதற்கிடையே அந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் இப்போது சேலஞ்சை ஏற்று டெக் மகேந்திரா களமிறங்கியுள்ளது. விரைவில் சர்வதேச தரத்திலான ஒரு ஏஐ கருவியை நாம் அவர்களிடம் எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications