டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் மீண்டும் டிஆர் எஸ்.. காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி: டைம்ஸ் நவ்

Google Oneindia Tamil News

Recommended Video

    தெலுங்கானாவில் கலைத்த ஆட்சியை மீண்டும் பிடிக்கிறது டிஆர் எஸ் ?

    டெல்லி : தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. யாருக்கு ஆட்சி என அம்மாநில கட்சிகள் நகம் கடித்துக் கொண்டிருக்க, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி உள்ளன.

    Telangana Exit Poll Results: TRS to retain state

    டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெலுங்கானாவில் சந்திர சேகர ராவின் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 37இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வெறும் 7 தொகுதிகளிலும் சுயேட்சைகள், மற்ற கட்சிகளுக்கு 9 இடங்களும் கிடைக்கும் தெரிகிறது.

    மாநிலத்தில் மொத்தமுள்ள இரண்டே முக்கால் கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். தெலுங்கானா அரசின் பதவிக்காலம் முடிவடைய 8 மாதங்கள் முன்பே, ஆட்சியை சந்திர சேகர ராவ் திடீரென கலைத்தார்.

    ஆயுள் காலம் முடியும் முன்பே ஆட்சியை அவர் கலைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மீண்டும் ஆட்சியை சந்திர சேகர ராவ் தக்க வைத்து கொள்வார் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளன.

    எப்படி இருந்தாலும், வாக்களித்த மக்கள் யாருக்கு ஆதரவளித்துள்ளனர் என்பது வரும் 11ம் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில் தெளிவாக தெரிந்துவிடும்.

    English summary
    The exit poll further said that the Mahakutami alliance led by Congress will win 37 seats. BJP is expected to win seven seats while others will win 9 seats in 119-seat Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X