ஹை அலர்ட் கொடுத்த உளவுத்துறை! நாடு முழுவதும் 3 நகரங்களுக்கு ஸ்கெட்ச்! உஷாரான போலீஸ்
டெல்லி: உலகம் முழுவதும் இன்று தொடங்கி அடுத்த 8 நாட்களுக்கு யூதர்கள் 'ஹனுக்கா' எனும் தங்களது புனித பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவில் யூதர்களை குறி வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே போலீசார் அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களிலுள்ள யூத நிறுவனங்களை குறிவைத்து பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை தகவல்கள் மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுவதால், குறிப்பிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முன்னதாக, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில், யூத மத நிகழ்வு ஒன்றின்போது, துப்பாக்கி ஏந்திய இரண்டுபேர் கண்ணில் தென்பட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். யூத பண்டிகையின் தொடக்கத்தைக் கொண்டாட நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் கூடியிருந்த நிலையில், சுமார் 50 ரவுண்டுகள் சுடப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உட்பட சுமார் 11 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன், இந்தத் துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதச் சம்பவம் என்று அறிவித்துள்ளார்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி












Click it and Unblock the Notifications