Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 நிமிஷம்தான்.. தலைகீழா மாறிடுச்சு.. #TerroristPragyaThakur .. இதுதான் இந்தியாவின் டாப் டிரண்டிங்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சொந்த கட்சி எம்.பி மீது அதிரடி காட்டிய பாஜக

    டெல்லி: #well_done_Pragya ஹேஷ்டேக் இந்தியாவின் டாப் டிரெண்டிங் ஆனது தெரிந்த சில நிமிடங்களிலேயே #TerroristPragyaThakur என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் மக்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்த நிலையில் அது சில நிமிடங்களிலேயே பல்லாயிரத்தை தாண்டியுள்ளது. இப்போது #TerroristPragyaThakur என்பது தான் இந்தியாவின் டாப் டிரெண்டிங் ஆக உள்ளது.

    #well_done_Pragya ஹேஷ்டேக் சிலர் மற்றும் சில அமைப்பினர் திட்டமிட்டு டுவிட்டர் இந்தியாவில் இன்றைக்கு டாப்பில் வர வைத்தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பிரக்யாவுக்கு ஆதரவாக எப்படி டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது என்பது தொடர்பாக பலரும் டுவிட்டரில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்தியா முழுவதும்

    இந்தியா முழுவதும்

    #well_done_Pragya இது தான் இந்தியாவின் டாப் டுவிட்டர் டிரெண்டிங் ஆக உள்ளது. இந்த டுவிட்டர் டிரெண்டிங்கை மிக வேகமாக செய்து வருகிறார்கள். இதை பார்த்து எப்படி டுவிட்டர் இந்தியா இதை அனுமதிக்கிறது என்று இந்தியா முழுவதும் மக்களும் கொதித்து போய் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    எம்பிக்கள் அதிர்ச்சி

    எம்பிக்கள் அதிர்ச்சி

    மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை சிறந்த தேச பக்தர் என்று மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்பியான பிரக்யா சிங் தாகூர்(பாஜக) நாடாளுமன்றத்தில் புகழ்ந்தார். இதை கேட்டு இந்திய நாடாளுமன்றமே அதிர்ச்சி அடைந்தது.

    ஜேபி நட்டா கண்டனம்

    ஜேபி நட்டா கண்டனம்

    பிரக்யாவின் இந்த கருத்துக்கு பாஜகவே கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸை முந்திக்கொண்டு பா4க தேசிய தலைவர் ஜேபி நட்டா பிரக்யாவை கடுமையாக கண்டித்தார். அத்துடன் பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் பாஜக நீக்கியது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்பட பலரும் வெளிப்படையாகவே கடுமையாக கண்டித்தனர். இதுபோன்ற பேச்சுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது அவர்கள் தெரிவித்தனர்.

    ராகுல் காந்தி தாக்கு

    ராகுல் காந்தி தாக்கு

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரக்யாவை பயங்கரவாதி பிரக்யா என்றும் அதனால் தான் பிரக்யா பயங்கராவதி கோட்சேவை தேசபக்தியாளர் என்ற புகழ்கிறார் என்று கடுமையாக தெரிவித்து இருந்தார்.

    டுவிட்டர் மீது கோபம்

    டுவிட்டர் மீது கோபம்

    இதனிடையே மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை சிறந்த தேச பக்தர் என்று சொன்னதற்காக பிரக்யாவை பாராட்டி #well_done_Pragya என்று டுவிட்டரில் டிரெண்டிங் செய்ய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் டாப் டிரெண்டிங் ஆக மாறியது. இதை கண்டுஅதிர்ச்சி அடைந்த பலர் டுவிட்டர் இந்தியா எப்படிஇதுபோன்ற டிரெண்டிங்கை அனுமதிக்கிறது என்று கேள்வி எழுப்பியடி பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.

    தலைகீழ் மாற்றம்

    தலைகீழ் மாற்றம்

    அதேநேரம் #TerroristPragyaThakur என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் மக்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர் வெறும் 30 நிமிடத்தில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் #TerroristPragyaThakur என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டனர். இதனால் அது இந்தியாவின் டாப் டிரெண்டாக மாறிஉள்ளது.

    மக்களின் டுவிட்டுக்கள் அப்படியே சில..

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+