இந்தியாவில் டெஸ்லா ஆலை! தொடங்குவதற்கு முன்னரே.. முடிவுக்கு வருகிறது? டிரம்புடன் சண்டைதான் காரணம்!
டெல்லி: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை விரைவில் நிறுவ இருப்பதாக எலான் மஸ்க் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், டிரம்புடன் மோதல் போக்கு நீடித்து வருவதால், இந்த ஆலையை அமைக்க முடியாமலேயே போகலாம் என்று சொல்லப்படுகிறது.
டிரம்புக்கு பக்க பலமாக இருந்த எலான் மஸ்க், விரைவில் அரசின் முக்கிய பொறுப்புகளுக்கும் உயர்ந்தார். எனவே எலான் மஸ்குக்கு கைமாறாக, அவரது நிறுவனங்களுக்கு சலுகைகளும், நிதி உதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் டிரம்ப் உதவியாக இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலைகள் வரலாமலேயே போகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து முன்னதாக பேசியிருந்த டிரம்ப், "டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவிற்கு செய்யும் துரோகம்" என்று விமர்சித்திருந்தார். இந்த ஸ்டேட்மென்ட்டை அவர் கொடுத்தபோது, எலான் மஸ்க்கும், அவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே இதை பலரும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருந்தபோதும், டிரம்ப் இதே பாணியில்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் சிக்கல் என்னவெனில், இப்போது டிரம்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையில் ஏழாம் பொருத்தம் ஏற்பட்டிருப்பதால் உண்மையிலேயே டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைய முடியாமல் போகலாம். இந்த கருத்துக்கு ஆதரவு சேர்க்கும் விதமாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. டெஸ்லாவின் பங்கு சந்தை மதிப்பு 15% வரை குறைந்திருக்கிறது. இதனால் 150 பில்லியன் அமெரிக்க டாலர் வைரை மஸ்க் இழந்திருக்கிறார்.
போதாத குறைக்கு சீனாவின் BYD போன்ற நிறுவனங்கள், மின்சார கார் உற்பத்தியில் சக்கை போடு போட்டு வருகின்றன. இதனால் உலக அளவில் டெஸ்லா காருக்கான மவுசு குறைந்திருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை அமைவதற்கான ஒப்பந்த எதிர்பார்த்தபடி போடப்படாது என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து மத்திய தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி கூறுகையில், "டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆர்வமாக இல்லை. சில்லறை விற்பனை நிலையங்களைத் திறக்க மட்டுமே முனைப்பாக இருக்கிறது. ஆனால், மெர்சிடிஸ்-பென்ஸ், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுகின்றன" என்று தெரிவித்திருந்தார்.
டிரம்ப் ஆதரவு இல்லாது, இந்திய அரசுடன் போதுமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாதது, BYD நிறுவனங்களின் போட்டி போன்ற பிரச்சனைகளுக்கு நடுவே, இந்தியாவின் 110% வரியும் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் டெஸ்லா கடையை விரிக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications