“ஸ்வீட் பாக்ஸுக்காக வெயிட்டிங்..” HBD கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி ட்வீட் போட்ட ராகுல்
டெல்லி: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஸ்வீட் பாக்ஸ்கிற்காக காத்திருக்கிறேன் என x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸின் ராகுல் காந்தி இன்று 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், தோழமை கட்சியின் நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அன்புச் சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் காந்தி மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்து சேரட்டும்" என வாழ்த்து தெரிவித்து x தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஸ்வீட் பாக்ஸ் கேட்டிருக்கிறார்.
அதாவது, "பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு எனது அருமை சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இன்று ஸ்வீட் பாக்ஸ்கிற்காக காத்திருக்கிறேன்" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஸ்வீட் பாக்ஸ் பெரும் விவாத பொருளாக மாறியிருந்தது. பாஜக, தமிழகக்தில் இந்த முறை பாமக, ஐஜேகே என சிறிய, பெரிய கட்சிகளை ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இருப்பினும் தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை. கோவை, குமரி, நெல்லை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளை பாஜக எதிர்பார்த்திருந்தது.
தேர்தல் பிரசாரத்திற்கு மோடியை நேரடியாக தமிழக பாஜக தலைமை களமிறக்கியிருந்தது. பலமுறை பிரதமர் மோடி வேலூருக்கும், கோவைக்கும், குமரிக்கும், நெல்லைக்கும், சென்னைக்கும் வந்து சென்றிருந்தார். வடமாநிலங்களில் நடப்பதை போல இங்கும் ரோட் ஷோக்களை நடத்தியிருந்தார். ஆனால், ராகுல் காந்தி ஒரு முறை மட்டுமே தேர்தல் பரப்புரைக்காக தமிழம் வந்திருந்தார். அவரது வருகை தமிழ்நாடு முழுவதும் பேரும் பேசுபொருளானது.

குறிப்பாக தனது வருகையின் போது ரோட்டை கிராஸ் செய்து ஸ்வீட் பாக்ஸ் வாங்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டது. இது குறித்து சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். அதாவது, "கடந்த முறை இங்கே நடந்த கூட்டம் இந்தியா முழுவதும் 'டிரெண்ட்' ஆனது. அதற்குக் காரணம், பிரதமர் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து க்ளோஸ் செய்துவிட்டார். அன்று ராகுல் காந்தி வழங்கிய இனிப்பு, கருத்துக்கணிப்புகளைத் தகர்த்துவிட்டது" என்று தேர்தல் வெற்றி குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி "உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே, எனக்கு உரிய ஸ்வீட் பாக்ஸுக்காகக் காத்திருக்கிறேன்" என்று x தளத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications