விளம்பரத்துக்கு மட்டும் பாஜக இவ்ளோ செலவா? மணிப்பூரின் வளர்ச்சி நிதி அளவுக்கு செலவு.. ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரத்திற்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் 2022ம் ஆண்டு ஒட்டுமொத்த 8 வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்கிற விவரம் தற்போது வெளி வந்துள்ளது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 23 நாட்கள் 11 அமர்வுகள் என நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறது. ஆனால் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் நேற்றும், இன்று பிற்பகல் வரையும் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சில முக்கியமான கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்திருந்தனர். அதற்கு பதில்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரத்திற்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த பாஜக அமைச்சர், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் விளம்பர செலவு ரூ.2,700 கோடி செலவிட்டதாக கூறியுள்ளார்.
அதாவது, கடந்த 2014 - 2015ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.424.84 கோடியும், மின்னணு ஊடகங்களுக்கு ரூ.473.67 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, 2015 - 2016ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.508.22 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.531.60 கோடி, 2016 - 2017ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.468.53 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.609.15 கோடி, 2017 - 2018ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.636.09 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.468.92 கோடி, 2018 - 2019ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.429.55 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.514.28 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.295.05 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.317.11 கோடி, 2020 - 2021ம் நிதியாண்டில் ரூ.179.04 அச்சு ஊடகங்களுக்கு கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.101.24 கோடி என செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் என சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,700 கோடி செலவாகியுள்ளது. இதில் வெளிநாட்டு ஊடகங்களில் ஏதும் அரசு விளம்பரம் செய்யவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் இங்குதான் பஞ்சாயத்தே வெடித்திருக்கிறது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறதோ, அதே அளவு தொகைதான் கடந்த 2022ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. அதாவது 8 மாநிலங்களின் வளர்ச்சிக்கு சேர்த்தே ரூ.2,755 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்படியெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சராசரியாக ரூ.344.3 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஓராண்டு விளம்பரத்திற்கு மத்திய அரசு செய்யும் தொகையை விட குறைவு என சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications