டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி.. வரலாறு காணாத அடி.. போச்சே.. புலம்பும் மாயாவதி

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி தற்போதைய டெல்லி சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சில வருடங்கள் முன்புகூட வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த மாயாவதி கட்சி, அந்த மாயாஜாலத்தை செய்ய தவறிவிட்டது.

    இந்த சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு சதவீதம் 1% க்கும் குறைந்துள்ளது. டெல்லி தேர்தலில் பாஜக முன்வைத்த ஷாஹீன் பாக் போராட்டம் பற்றிய குற்றச்சாட்டு மற்றும் கெஜ்ரிவால் முன்வைத்த, வளர்ச்சி திட்டங்கள் இடையேதான், வாக்காளர்கள் கவனம் குவிக்கப்பட்டிருந்தது. இந்த இரு அலைகள் நடுவே, பகுஜன் சமாஜ் கட்சி 0.58% வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி 1993ல் முதல் முறையாக, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது, 55 இடங்களில் வேட்பாளர்கள் நின்றனர். 1.88% வாக்குகளைப் பெற்றனர். 1998 ஆம் ஆண்டில், 40 வேட்பாளர்களை நிறுத்தியது வாக்கு சதவீதம் 5.76% என்ற அளவில் உயர்ந்தது.

    மீண்டும் வந்த கெஜ்ரிவால்.. சோர்ந்து போன பாஜக.. ஆம் ஆத்மியின் அதிரடி வெற்றிக் கதை!மீண்டும் வந்த கெஜ்ரிவால்.. சோர்ந்து போன பாஜக.. ஆம் ஆத்மியின் அதிரடி வெற்றிக் கதை!

    பகுஜன் சமாஜ் வளர்ச்சி

    பகுஜன் சமாஜ் வளர்ச்சி

    2003ல் பகுஜன் சமாஜ் கட்சி 8.96% வாக்குகளைப் பெற்றபோது இது மேலும், அதிகரித்தது, 2007 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களை வென்று மாஸ் காட்டிய அடுத்த வருடம், 2008 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பகுஜன் சமாஜ் 2 இடங்களை வென்று தனது கணக்கை துவங்கியது. அப்போது, 14.05% வாக்குகளைப் பெற்றது அந்த கட்சி. ஆனால், இதன்பிறகுதான் அக்கட்சிக்கு, இறக்கம் காத்திருந்தது.

    மிக மோசம்

    மிக மோசம்

    2013ஆம் ஆண்டில், பகுஜன் சமாஜ் கட்சி 69 வேட்பாளர்களை களமிறக்கியபோதிலும் 5.35% வாக்குகளைத்தான் பெற்றது. இது 2015இல் 1.30% ஆக மேலும் சரிந்தது. ஆனால் 2020 இதுவரை டெல்லியில் அந்த கட்சி பெற்ற மோசமான தோல்வியாக மாறியுள்ளது. இதை மாயாவதியே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி.

    20 லட்சம் தலித் ஓட்டுக்கள்

    20 லட்சம் தலித் ஓட்டுக்கள்

    பகுஜன் சமாஜ் கட்சி டெல்லியில் பல்வேறு ஜாதி மற்றும் சமூகங்களை சேர்ந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, 70 தொகுதிகளிலும் நிறுத்தியுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தலித்துகள் வாக்குகள் டெல்லியில் உள்ளன. 12 ரிசர்வ் தொகுதிகளும் உள்ளன. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி முத்திரை பதிக்க முடியவில்லை.

    பகுஜன் நிலை

    பகுஜன் நிலை

    அக்கட்சியின் டெல்லி தலைவர் லக்ஷ்மன் சிங் சமீபத்தில், கூறுகையில் "தலித்துகள் மட்டுமே கட்சிக்கு வாக்களித்தால், எங்களுக்கு வேறு யாரும் தேவையில்லை. வெற்றி பெற்றுவிடுவோம்" என்று கூறினார். ஆனால் டெல்லி சட்டசபையில் 12 ரிசர்வ் தொகுதிகளில், கோகல்பூரி தொகுதியில் மட்டுமே 2008 இல் ஒரு பகுஜன் சமாஜ் கட்சி வென்றது. 2008 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களை வென்றது. மற்றொன்று பொது தொகுதியான பதர்பூர்.

    English summary
    The Bahujan Samaj Party is the biggest loser in Delhi assembly election, it's vote share comes below 1 percent.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X