இரவோடு இரவாக மத்திய அரசு சூப்பர்.. லட்டு மாதிரி உயரும் ஊதியம்.. யாருக்கு எவ்வளவு தெரியுமா?
டெல்லி: ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 ஆகிய இரண்டு முறை மத்திய அரசு அகவிலைப்படியை (VDA) திருத்துகிறது. அந்த வகையில் இப்போதும் திருத்தியுள்ளது. இதன்படி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அக்டோபர் 1, முதல் அமலுக்கு வரும் புதிய ஊதிய விகிதம் காரணமாக கட்டிட கட்டுமானம், ஏற்றுதல் மற்றும் இறக்குதல், அவைக்காவலர், தூய்மைப் பணி, வீட்டு பராமரிப்பு, சுரங்கம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
மத்திய அரசு ஒவ்வாரு ஆண்டும் நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அரையாண்டு கணக்கு முடிவு நாளுக்கு மறுநாளான அக்டோபர் 1ம் தேதி ஆகிய நாட்களில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படியை உயர்த்தும் (விடிஏ). அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் உயர்த்தப்படுகிறது.

இந்த ஊதிய உயர்வால் கட்டிட கட்டுமானம், ஏற்றுதல் மற்றும் இறக்குதல், அவைக்காவலர், தூய்மைப் பணி, வீட்டு பராமரிப்பு, சுரங்கம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின், குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் திறன் நிலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண அடிப்படை தொழிலாளர்கள் (திறமையற்றவர்கள்), ஓரளவு வேலை தெரிந்தவர்கள் (அரை திறமையானவர்கள்), திறமையானவர்கள் மற்றும் மிகவும் திறமையானவர்கள் என்ற அடிப்படையில் ஊதியங்கள் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏ, பி மற்றும் சி என மூன்று வகையில் திருத்தம் இருக்கிறது. கட்டுமானம், தூய்மைப்பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றில் உள்ள ஏ பகுதியில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் ஒரு நாளைக்கு ரூ.783 (மாதத்திற்கு ரூ .20,358) ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.
அரை திறமையானவர்களுக்கு ரூ.868 ஒரு நாளைக்கு (மாதத்திற்கு ரூ.22,568) ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திறமையானவர்கள், எழுத்தர்கள் மற்றும் அவைக்காவலர்கள் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ .954 (மாதத்திற்கு ரூ.24,804) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் திறமையான மற்றும் வாட்ச் & வார்டு ஒரு நாளைக்கு ரூ.1,035 (மாதத்திற்கு ரூ.26,910) ஆக நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு
இந்த தகவல்களை தாண்டி, துறை, பிரிவுகள் மற்றும் பகுதி வாரியாக குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையரின் (மத்திய) இணையதளத்தில் (clc.gov.in) பார்க்க முடியும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications