கொரோனா தாக்கம்: சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூன் 30 வரை நீட்டிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கொரோனாவின் முதல் அலை நீடித்தது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்த ஆண்டின் மார்ச்சுக்கு பிறகு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் இருந்து வருகிறது.

ஆறுதல் அளிக்கும் கொரோனா

ஆறுதல் அளிக்கும் கொரோனா

முதல் அலையை விட 2-வது அலை மக்களை பாடாய்படுத்தி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு, அதிகளவு உயிரிழப்புகள் என்று இந்தியா தள்ளாடியது.தற்போதைய நிலைமை ஆறுதல் அளிக்கும்படியாக இருக்கிறது. தினமும் 3,00,000-க்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 2,00,000-க்கும் கீழ் குறைந்து விட்டது. உயிரிழப்பும் 4,000-க்குள் குறைய தொடங்கி விட்டது.

விமான சேவை நிறுத்தம்

விமான சேவை நிறுத்தம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே இந்தியாவில் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை. முதல் அலையின்போதே சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இடையில் ஒரு சில நாடுகளுக்கு விமான சேவை துவக்கப்பட்டாலும், அதன்பிறகு 2-வது அலை தாக்கம் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது.

 ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஜூன் 30 வரை நீட்டிப்பு

இந்த நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் 'சர்வதேச பயணிகளின் விமானங்களுக்கான தடை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்வதேச கட்டுப்பாடு கொண்ட அனைத்து சரக்கு விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறையால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்கள் இயக்கலாம்' என்று கூறியுள்ளது.

சிறப்பு விமானம் இயக்கலாம்

சிறப்பு விமானம் இயக்கலாம்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளுக்கு இந்தியா air bubble முறையில் அந்தந்த நாடுகளின் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+