9 ஆண்டுகளில் 100 நாடுகளுக்கும் மேல் பயணம்.. மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு.. இவ்வளவு செலவா.. ப்பா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் சென்று வரும் நிலையில் அவருடைய பயணத்திற்காக அரசு எவ்வளவு செலவு செய்தது என்பது குறித்து காங்கிரஸ் எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், புதிய முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துதல் என பல்வேறு நோக்கங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச நாடுகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்படியாக இவர் பிரதமராக பதவியேற்றதிலிருந்து 100க்கும் அதிகமான முறை வெளிநாடுகளுக்கு பயணித்திருக்கிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 124 நாடுகளுக்கு சென்றிருக்கிறார். அந்நாடுகளில் இருதரப்பு சந்திப்புகள், பலதரப்பு சந்திப்புகள் மற்றும் சர்வதேச உச்சி மாநாடுகள் போன்றவற்றில் பங்கேற்றிருக்கிறார். பிரதமர் தற்போது அடிக்கடி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பயணப்பட்டாலும் அவர் பிரதமரான பின்னர் முதன் முதலில் பயணித்த நாடு பூடான்தான். அண்டை நாடுகளுடன் இந்தியாவின் நெருங்கிய உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த பயணம் அமைந்தது.
இப்படியாக அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ஆனால் அவர் பயணம் செய்ததில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை செய்த பயணங்களின் செலவுகள்தான் அதிகம். அதாவது, 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது ரூ.23.2 கோடி செலவானது. அதேபோல, 2014ம் ஆண்டு ஜூலை மாதம் பிரேசில் பயணத்திற்கு ரூ.20 கோடியும், 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா சென்றபோது ரூ.22 கோடியும், 2015ம் ஆண்டு அயர்லாந்து சென்றபோது ரூ.18 கோடியும் செலவாகியுள்ளது. இந்த 5 பயணங்கள்தான் அதிக செலவு ஏற்பட்ட பயணங்களாகும்.
கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் தொடங்கி 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் ரூ.359 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு என்று காங்கிரஸ் எம்பி சையத் நசீர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு ரூ.30 கோடி வரை செலவாகியுள்ளது என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications