அயோத்தி வழக்கு முடிந்ததும் ராமர் கோவில்தான்.. விரைவில் கட்டுவோம்.. ஆர்எஸ்எஸ் உறுதி!
அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை ஆர்எஸ்எஸ் அமைப்பு வரவேற்று இருக்கிறது.
டெல்லி: அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை ஆர்எஸ்எஸ் அமைப்பு வரவேற்று இருக்கிறது.
அயோத்தி வழக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து மீண்டும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சமரசம் தோல்வியில் முடிந்துள்ளது.
சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் தினமும் விசாரிக்கப்படும். வழக்கு விசாரணை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த உத்தரவை ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது வரவேற்று இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு இது தொடர்பாக வெளியிட்டு இருக்கும் செய்திக்கு குறிப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து வழக்கு தினமும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்கு முடிவிற்கு வரும் என்று நம்புகிறோம். அதிலும் வழக்கு விசாரணை விரைவில் முடியும் என்றும் நம்புகிறோம்.
வழக்கு விசாரணை முடிந்தவுடன் கண்டிப்பாக நாங்கள் ராமர் கோவில் கட்டுவதற்கு தொடங்குவோம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications