வாழ்த்துக்கள் தோனி.. உங்களுக்காவது மரியாதை இருக்கே! மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் உள்குத்து
டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், ஐபிஎலில் வென்ற தோனிக்கு வாழ்த்து தெரிவித்து சில விளையாட்டு வீரர்களுக்காவது மரியாதை கிடைக்கிறதே என்று பதிவிட்டு உள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றிபெற்று 5 வது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கைபற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அதன் கேப்டன் தோனிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வாழ்த்தி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "தோனி ஜிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். சில விளையாட்டு வீரர்களாவது தங்களுக்கு தகுதியான அன்பையும் மரியாதையையும் பெறுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை பொறுத்தவரை நீதிக்காக போராடுவது இன்னும் தொடர்கிறது." என்று பதிவிட்டு உள்ளார்.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமாக இருப்பவர் பிரிஜ்பூஷன் சரண் சிங். இவர் பயிற்சியில் ஈடுபடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக இதுபற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு. ஆனால் அந்த குழு முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டி நீதியை பெற வேண்டும் என்பதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாதக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோருடன் கடந்த ஞாயிறு அன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது இந்த மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் அதை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கைது செய்யப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் தோனியை வாழ்த்தி வெளியிட்ட ட்வீட்டின் மூலமாக தன்னுடைய மெசேஜை சொல்லியுள்ளார் சாக்சி மாலிக்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications