கொரோனா வைரஸ் தாக்கம் பேரிடர்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
டெல்லி: கொரோனா தாக்கத்தை பேரிடராக (notified disaster) அறிவித்துள்ளது மத்திய அரசு. இதை, பெரும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு சில தினங்கள் முன்பு அறிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
Recommended Video
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பை பேரிடராக கருதி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதி செலவிட்டு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இந்த அறிவிப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். அவர்களது குடும்பத்தாருக்கு தலா 4 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது பேரிடர் நிர்வாகத்தை மாநில அரசின் கைகளுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு. ஒரு வேளை கட்டுப்படுத்த முடியாத நிலைமை சென்றால் அப்போது இதை தேசிய பேரிடராக மாற்றி அறிவிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

தேவையான முகாம்கள் அமைத்து, தடுப்பு நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட அம்சங்களை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், மாநில அரசுதான், செலவீனங்களை ஏற்க வேண்டும், சிகிச்சைக்காகவும் செலவீனங்களை மாநில அரசே நிர்ணயிக்க வேண்டும், என்றும் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று, அளித்த பேட்டியில், கூறுகையில், இதுவரை வெளிநாட்டிலிருந்து வரும் சுமார் 12 லட்சம் பயணிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் கொரோனா வைரஸுக்காக ோதித்து பார்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ












Click it and Unblock the Notifications