அடடே ஆச்சரியம்.. நாடு முழுக்க நேற்றை விட இன்று குறைந்த கொரோனா கேஸ்கள்.. அலை ஓயுமா?
டெல்லி: இந்தியாவில் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 1,68,063 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 6.4 சதவீதம் குறைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 6.4 சதவீதம் குறைந்துள்ளது. இதில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட 4,461 பேரும் அடங்குவர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 277 இறப்புகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை
தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று 13.29 சதவீதமாக இருந்த நிலையில், இன்று 10.64 சதவீதமாக குறைந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 8.85 சதவீதமாக உள்ள நிலையில், நாட்டில் 1.79 லட்சம் கொரோனா பாதிப்புகள் திங்கட்கிழமை பதிவாகியுள்ளன. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,21,446 ஆக உள்ள நிலையில், இது பாதிப்பு எண்ணிக்கையில் 2.29 சதவீதமாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,58,75,790 ஆக அதிகரித்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 4,84,213 ஆக உயர்ந்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கடந்த 24 மணி நேரத்தில் 69,959 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,45,70,131 ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 96.36 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை 152.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியா திங்கள்கிழமை முதல் முன்னெச்சரிக்கை அளவை அதிகரித்துள்ள நிலையில், 9 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

மகராஷ்டிராவில் கடும் பாதிப்பு
கொரோனா தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் 33,470 புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,247 பேர் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திங்களன்று எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் இதுகுறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலை ஜனவரி இறுதிக்குள் உச்சத்தை எட்டும் எனவும் மகராஷ்டிராவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
Recommended Video

தலைநகரில் பாதிப்பு
தலைநகரான டெல்லியில் திங்களன்று 19,166 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் டெல்லியில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் ஒவ்வொரு நான்காவது நபருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது எனவும், நாட்டின் தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை விகிதம் 25 சதவீதமாக உள்ளது எனவும், இது கடந்தாண்டு மே 5ல் இருந்த நிலையை விட அதிகபட்சமாக உள்ளது. கொரோனா பாதிப்பு டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உணவகங்கள் உள்ளிட்ட சில இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications