அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
டெல்லி: டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பதஞ்சலி வழக்கு குறித்து நேரலையில் விவாதித்துக் கொண்டிருந்த போது செய்தியாளர் ஒருவர் திடீரென தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதை செய்தியை வழங்கிக் கொண்டிருந்த ஆங்கர் ஒருவழியாக சமாளித்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாகவே ஊடகப் பணி என்பது மிகவும் சவாலானது. அன்றாட நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மிகுந்த கவனத்துடன் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறு தவறு இருந்தால் கூட அது மிகப்பெரிய பிரச்சனையில் போய் முடியும்.. குறிப்பாக நேரலைகளில் செய்தி வாசிக்கும் போதும் அல்லது செய்தியாளர்கள் களத்தில் இருந்து செய்தியை வழங்கும்போதும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்..
அப்படி இல்லை என்றால் பல்வேறு பிரச்சனைகளுக்கும் கேலி கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் இன்று நடைபெற்றிருக்கிறது. பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நிருபரான அஸ்மித் என்பவர் டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பதஞ்சலி வழக்கு குறித்த விபரங்களை நேரில் வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் சொல்ல வந்ததை மறந்துவிட்டார் போல.. இதை அடுத்து நேரலையிலேயே சில வார்த்தைகளை தவறாக அவர் பயன்படுத்தினார்.. இது லைவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இருந்த போதும் உடனடியாக சுதாரித்த நிகழ்ச்சி வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை மீண்டும் தொடர்பு கொள்கிறோம் எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.
இருந்தபோதும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதே நேரத்தில் தான் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி விட்டோம் என செய்தியாளர் அஸ்மித் தவறை உணர்ந்தார். ஆனால் அதற்குள் அது டிவியில் லைவ்வாக வந்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விட்டது.
இந்த நிலையில் இது குறித்து அந்த தனியார் செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. அதில், "இன்று ஒரு நேரடி ஒளிபரப்பில், ஒரு நிருபர் கவனக்குறைவாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.. அவர் லைவ்வில் இருப்பதை உணரவில்லை. தவறுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதை உறுதிசெய்ய இன்னும் கடினமாக உழைப்போம்" என கூறியுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் அந்த செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒருவர் கூறியுள்ளார். சிலரோ, பொதுவாக இதுபோன்ற நேரங்களில் தவறு ஏற்படுவது இயல்புதான் மனித தவறுக்கு எதுவுமே செய்ய முடியாது அவரை விமர்சிக்க வேண்டாம்.. அதே நேரத்தில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் போது மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications