கெஜ்ரிவால் வீடு மீது பாஜகவினர் தாக்குதல்.. காஷ்மீர் பைல்ஸ் கருத்தையடுத்து வன்முறை.. 70 பேர் கைது
டெல்லி: ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் தொடர்பான கருத்து விவகாரத்தில் டெல்லியில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை சேதப்படுத்திய நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் மாறியுள்ளது. 1990 காலக்கட்டத்தில் காஷ்மீர் பண்டித்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறியதை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இந்த படத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உண்மையை படமாக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில், ‛‛காஷ்மீரில் பெரும் சோகம் நடந்துள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது உங்களுக்காக ஒரு படம் தயாரித்தோம் என்று காஷ்மீரி பண்டித்களிடம் அரசு சொல்கிறது. காஷ்மீர் பண்டித்களுக்கு மறுவாழ்வு தான் வேண்டுமே தவிர திரைப்படம் இல்லை.

யூடியூப்பில் வெளியிடுங்கள்
என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் முக்கியமில்லை. இது பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கலாம். மேலும் படத்தை யூடியூப்பில் வெளியிட சொல்லுங்கள். அனைவரும் பார்க்கட்டும். திரைப்படத்திற்கு வரி விலக்கு எதற்கு. பாஜக தொண்டர்கள் செம்மறி ஆடுகளை போல நடந்து கொள்வதை நிறுத்துங்கள். பாஜகவின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாருங்கள். உங்களைப் பயன்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவோம்" என்றார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாஜக தலைவர்கள் நேரிடையாக அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்த நிலையில் பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்பியும், பாஜக இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா தலைமையில் டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மன்னிப்பு கோர வேண்டும்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதோடு, கையில் பதாகைகள் ஏந்தி இருந்தனர். இதுபற்றி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவால் இந்துக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதற்காக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

70 பேர் கைது
இந்த வேளையில் சிலர் தடுப்புகளை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டு சுவற்றில் பெயிண்ட்டை வீசினர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிலவற்றை அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுபற்றி டெல்லி வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறுகையில், ‛‛70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கெஜ்ரிவால் வீடு சேதம்
இந்நிலையில் தான் பாஜகவினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை சேதப்படுத்தி உள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவால் வீடு மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் உடைந்துள்ளன. பாதுகாப்பு தடைகளை தாண்டி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.

போலீசார் முன்னிலையில்...
இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ‛‛ டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் டெல்லி இல்லம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து கேட் கதவில் இருந்த துடைப்பம் சின்னம் சிதைக்கப்பட்டுள்ளது. பாஜக குண்டர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை டெல்லி போலீசார் முன்னிலையில் சேதப்படுத்தி உள்ளனர்'' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications