நாங்கள் தோற்க இதுதான் காரணம்.. இப்போ புரியுது.. புலம்பும் பாஜகவினர்!
விவசாயத் துயரங்கள், வேலைவாய்ப்பு நெருக்கடிகளுக்கு பாஜக கொடுத்த விலை தான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என்று அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: விவசாயத் துயரங்கள், வேலைவாய்ப்பு நெருக்கடிகளுக்கு பாஜக கொடுத்த விலை தான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என்று அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா, மிசோரம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இருப்பினும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் பெறவில்லை என சில பாஜக மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தோல்விக்கு காரணம்
5 மாநிலத் தேர்தல்களில் பிரதமர் மோடியை குறை கூற முடியாது. மாநிலப் பிரச்சனைகளை வைத்தே வெற்றி கணிக்கப்பட்டுள்ளது. மாநில பிரச்சனைகள் முன் வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டன. அதே நேரம், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்ததே வெற்றிக்கு வழி வகுத்தாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சி இல்லை
சட்டீஸ்கரில் தேர்தல் நேரத்தில் நெல்லுக்கான விலையை நிர்ணயிக்க கோரி விவசாயிகள் செய்த போராட்டம், தேர்தல் முடிவை மாற்றி விட்டது. குஜராத் தேர்தலை முன் உதாரணமாக வைத்து பார்த்தால், தொழில் துறையில் கண்ட வளர்ச்சி, விவசாயத்தில் இல்லாமல் போனது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஜாதி பிரச்சனை
மத்தியபிரதேசத்தில் ஜாதிய பிரச்சனையில் முக்கிய இடங்களை இழக்க நேரிட்டது. சில விஷயங்களை பாஜக கவனிக்காமல் போய்விட்டது. விவசாய போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட காரணங்களும் தோல்விக்கு காரணமாக இருந்து விட்டது.

திட்டங்கள் இல்லை
வேலைவாய்ப்பு நெருக்கடி, சொல்லும் படியான திட்டங்கள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. பிரபலமற்ற முதல்வராக வசுந்தரா ராஜே இருந்தது தோல்விக்கு காரணமாகி உள்ளது, என்றும் பாஜக தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஸ்தம்பித்த டெல்லி.. இனி இளைஞர்கள் பயப்படமாட்டார்கள்.. CJP பதிவால் மத்திய அரசு ஷாக்! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications