'நீட்' தேர்வு மையங்கள் குறித்த விபரம் வெளியீடு..எந்த இணையதளம்? எப்படி டவுன்லோட் செய்வது? முழு விவரம்
டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் பட்டியலை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது.
தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வு
வருகிற செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 202 தேர்வு மையங்களில் 12-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பேனா, காகித முறையில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10- ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

தேர்வு மைய பட்டியல்
இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் பட்டியலை
தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வு மையங்களின் பட்டியலை அறியலாம். அதாவது https://neet.nta.nic.in/ இணையதளத்தில் சென்று View Advanced Information For Allottement of Centre City என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்பு நீட் தேர்வு விண்ணப்ப எண் (application no), பிறந்த தேதி, கடவுச்சொல் (password) ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு மையத்தை அறிந்து கொள்ளலாம். விருப்பப்பட்டால் தேர்வு மைய விவரங்களை பதிவிறக்கம்(download) செய்தும் கொள்ளலாம்.

சிக்கல் இருந்தால்..
இதேபோல் நீட் தேர்வில் ஓஎம்ஆர் தாளை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்த விவரமும் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தைக் காண்பதில் சிக்கல் உள்ள விண்ணப்பதாரர்கள் 011-40759000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது [email protected] என்ற முகவரிக்கு இ-மெயில் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான மாணவர்கள் விண்ணப்பம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத மிக குறைந்த மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு கல்வித்துறை தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications