அம்மாடியோவ்.. 18 ஆயிரம் அடி உயரத்தில் கம்பீரமாக சுற்றிய பனிச்சிறுத்தை.. நெட்டிசன்கள் பிரம்மிப்பு
டெல்லி: இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் 18 ஆயிரம் அடி உச்சியில் பனிசிறுத்தை ஒன்று கம்பீரமாக நடைபோடும் அரிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இயற்கை காட்சிகள் குறித்து புகைப்படம் எடுக்கும் பிரபல புகைப்பட கலைஞர் கிட்டியா பாவ்லோவ்ஸ்கிவ் (Kittiya Pawlowski) எடுத்த இந்த புகைப்படத்தை தி டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
Ghosts of the Mountains என்று பனிச்சிறுத்தைகள் அழைக்கப்படுகின்றன. பூனை வகையை சேர்ந்த பனிச்சிறுத்தைகள் அழிய வாய்ப்பு உள்ள இனங்களில் ஒன்றாக பட்டியலிடப்படுள்ளது.
உலக அளவில் ஒட்டுமொத்தமாக வசிக்கும் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

10 சதவிகிதம் குறையலாம்
பனிச்சிறுத்தைகள் எண்ணிக்கை சரிந்து வருவதால் 2040 ஆம் ஆண்டிற்குள் மேலும் 10 சதவிகிதம் குறையலாம் என்றும் சொல்லப்படுகிறது. வாழ்விட அழிப்பு, பருவநிலை மாற்றம் என பல காரணங்கள் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைய காரணமாக சொல்லப்படுகிறது. இமய மலை, திபெத்திய பீடபூமி பகுதிகளில் இந்த பனிச்சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன.

கூச்ச சுபாவம் கொண்ட விலங்காக..
பனிச்சிறுத்தைகள் பொதுவாக கூச்ச சுபாவம் கொண்ட விலங்காக கருதப்படுகிறது. 100 சதுர கி.மீட்டருக்கு வெறும் 4 பனிச்சிறுத்தைகள் என்ற அளவிலே வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் தன்மையை பனிச்சிறுத்தைகள் கொண்டது. இதனால் அவ்வளவு எளிதில் மனிதர்களால் கண்டு விட முடியாது.

மலைகளின் பேய்
அரிதாக சில வேளைகளில் மட்டுமே இத்தகைய பனிச்சிறுத்தைகள் காணக்கிடைக்கின்றன. மத்திய மற்றும் தென் ஆசிய மலைகளில் அதிகம் உள்ள பனிச்சிறுத்தைகளின் தோல் பனிப்பாறைகளின் நிறத்திலேயே இருக்கும். இதனால் இதற்கு மலைகளின் பேய் என்ற பெயரும் உள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ள தேசிய பூங்காக்களில் அபூர்வமாக ஒரு பனிச்சிறுத்தை தென்பட்டது.
|
18 ஆயிரம் அடி உச்சியில்
அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அப்போது வெளியிடப்பட்டு மிகவும் டிரெண்டிங் ஆகி இருந்தது. இப்படி அரிதாக எப்போதாவது தென்படும் இந்த பனிச்சிறுத்தைகள் தற்போது இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் சென்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்ட்டுள்ளன. இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் 18 ஆயிரம் அடி உச்சியில் பனிசிறுத்தை ஒன்று கம்பீரமாக நடைபோடும் அரிய காட்சிகள் வெளிவந்துள்ளன.

மெய் சிலிர்க்கும் வகையில்
இயற்கை காட்சிகள் குறித்து புகைப்படம் எடுக்கும் பிரபல புகைப்பட கலைஞர் கிட்டியா பாவ்லோவ்ஸ்கிவ் (Kittiya Pawlowski) எடுத்த இந்த புகைப்படத்தை தி டைம்ஸ் வெளியிட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் கம்பீரமாக நடைபெறும் பனிச்சிறுத்தையை பார்ப்பதற்கே மெய் சிலிர்க்கும் வகையில் உள்ளது. முற்றிலும் பனி படர்ந்த சூழலில் சிறுத்தை எட்டு வைத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வெள்ளை சிறுத்தையை படம் பிடித்ததாக
தனது உடல் அமைப்பை விட 7 மடங்கு நீளம் வரை தாவும் தன்மையை கொண்டது பனிச்சிறுத்தைகள். இதன் முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிடச் சற்றே சிறியதாக இருப்பது சிறுத்தைகள் நீண்ட தூரம் தாவுவதற்கு வசதியாக இருக்கிறது. வனவிலங்குகள் குறித்த படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவை சேர்ந்த புகைப்பட கலைஞர் கிட்டியா பாவ்லோவ்ஸ்கிவ், மலைப்பகுதியில் சுமார் 103 மைல்கள் டிரெக்கிங் செய்து இந்த வெள்ளை சிறுத்தையை படம் பிடித்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். நெட்டிசன்கள் பலரும் வியந்து அவரை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications