நான் இல்லைங்க.. எல்லாத்துக்கும் இவர்தான் காரணம்.. மோடிக்கு பெருமித கும்பிடு போட்ட அமித் ஷா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஒன்றாக சென்ற அமித்ஷா மற்றும் மோடி இருவருக்கும், உற்சாகமிக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரையும் மலர் தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.

The success of the loksabha election results is owned by 11 crore BJP volunteers .. Amit Shah talks

பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா, இந்த மக்களவைத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். சிறப்பான வெற்றியை எங்களுக்கு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

இந்த வெற்றி 11 கோடி பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு சொந்தமானது. தொண்டர்களின் ஆசிர்வாதமும் கடும் உழைப்பும் தான் பாரதிய ஜனதாவின் இந்த பிரம்மாண்ட வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாக கூறினார். எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணியை தகர்த்துள்ளோம்

50 ஆண்டுகளுக்கு பின் பெருவாரியான வெற்றியை பதிவு செய்துள்ள கட்சி என்ற பெருமையை பாரதிய ஜனதா பெற்றிருப்பதாக கூறினார். மேலும் இந்த பிரம்மாண்ட வெற்றியை மறுமுறை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பேசினார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் கதாநாயகன் மோடியே என்றார்.

The success of the loksabha election results is owned by 11 crore BJP volunteers .. Amit Shah talks

மேலும் பேசிய அவர் இமாச்சல் அருணாச்சல் ஹரியானா மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்திலும் 50 சதவீததத்திற்கும் மேலான வாக்குகளை பெற்று பாரதிய ஜனதா சாதித்துள்ளதாக கூறினார்.

காஷ்மீர் முதல் அந்தமான் வரை காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து நிற்பதாக குறிப்பிட்டார்மேலும் காங்கிரஸின் பிடியில் இருந்த தலைநகர் டெல்லியை பாஜக முழுமையாக தன்வசப்படுத்தியுள்ளதாக பெருமை பொங்க கூறினார்

மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றுள்ளோம் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளோம். விரைவில் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பாஜக ஊடுருவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+