சிங்கம் இஸ் பேக்… பணியில் இணைய ஸ்ரீநகர் திரும்பினார் அபிநந்தன்
Recommended Video

டெல்லி: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் தனது படையில் இணைய ஸ்ரீநகர் திரும்பியுள்ளார்.
நான்கு வார கால மருத்துவ விடுப்பில் சென்ற போர் விமானி அபிநந்தன், முழு உடல் தகுதியுடன், தான் விரும்பிய போது மீண்டும் பணியில் சேர்வார் என்று விமான படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் பணியில் இணைய மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு எல்லைத் தாண்டி சென்று பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தக்க பதிலடி அளித்தது.

துரதிஷ்டவசம்
கடந்த மாதம் 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் (35), பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

அபிநந்தன் விடுவிப்பு
பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து, போர் பதற்றத்தை தணிக்க 2 நாட்களுக்கு பிறகு விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.

தாயகம் திரும்பினார்
இதனைத் தொடர்ந்து, மார்ச் 1 ம் தேதி சாலை மார்க்கமாக அழைத்துவரப்பட்ட அபிநந்தனை வரவேற்க வாகா - அட்டாரி எல்லையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆரவாரமாக அபிநந்தனை தாயகம் வரவேற்றனர்.

4 வாரம் மருத்துவ விடுப்பு
இந்த நிலையில், அபிநந்தன் விமானியாக தொடர்வாரா அல்லது விமானப் படையில் வேறேதும் நடை முறைகள் உள்ளனவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிநந்தன், 4 வார கால மருத்துவ விடுப்பில் சென்றார்.

மீண்டும் அபிநந்தன்
இந்நிலையில், ஸ்ரீநகர் திரும்பியுள்ள அபிநந்தன், மீண்டும் பணியில் இணைய உள்ளார். சென்னையில் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் மீண்டும் தமது அணியில் இணைவதற்காக ஸ்ரீநகருக்கே திரும்பியுள்ளார். மருத்துவபரிசோதனைக்கு பிறகு பணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications