அப்போ டெஸ்லா காரையும் ஹேக் செய்யலாமா? எலான் மஸ்கே எதிர்பார்த்து இருக்க மாட்டார்! திருப்பி கேட்ட பாஜக
டெல்லி: அனைத்தயும் ஹேக் செய்ய முடியும் என்றால் டெஸ்லா கார்களையும் ஹேக் செய்துவிடலாம் அல்லவா என்று எலான் மஸ்கிற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது என்றும், அனைத்தையும் ஹேக் செய்ய முடியும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இவிஎம் எனப்படும் இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளருக்கான முதன்மை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதில் சாப்ட்வேர் பிரச்சினையால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், இவிஎம் எந்திரங்களை ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
எலான் மஸ்க் இது தொடர்பாக கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் ஹேக்கிங்க் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது" என்றார். எலான் மஸ்கின் இந்த கருத்து இந்தியாவில் மீண்டும் இவிஎம் இயந்திரங்கள் மீதான விவாதத்தை கிளப்பிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எலான் மஸ்கின் கருத்தை ஆதரித்து இருந்தார்.
"இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்பு பெட்டி ஆகும். அதை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை" என்றார். அதே நேரம் எலான் மஸ்கின் கருத்து தவறானது என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, "இவிஎம் குறித்த எலான் மஸ்கின் கருத்து அமெரிக்கா மற்றும் பிற இடங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். இணையத்துடன் இணைக்கப்பட்ட இவிஎம்களை உருவாக்க அவர்கள் வழக்கமான கணினி தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்துவமானவை, பாதுகாப்பானவை. இணையதள இணைப்போ, புளூ டூத் வசதியோ, வைபை வசதியோ இல்லை" என்றார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "அனைத்தையும் ஹேக் செய்ய முடியும்" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ராஜீவ் சந்திரசேகர், டெஸ்லா கார்களையும் ஹேக் செய்ய முடியும் தானே எனக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அனைத்தயும் ஹேக் செய்ய முடியும் என்ற எலான் மஸ்க்கின் வாதம் தவறானது என நான் கருதுகிறேன்
நான் எலான் மஸ்க் கிடையாது. அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். எனினும், தொழில்நுட்பம் குறித்த சில புரிதல் எனக்கும் உள்ளது. உலகில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் தயாரிப்பு எதுவும் இருக்க முடியாது எனக் கூறுவது எப்படி இருக்கிறது என்றால் டெஸ்லா கார்கள் அனைத்தையும் ஹேக் செய்யலாம் என சொல்வது போல உள்ளது" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications