உற்று பாருங்க.. இதுல 3 முகங்கள் இருக்கு.. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?.. அதுவும் 13 செகண்டில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒரு முகம் இருக்கிறது. இந்த முகத்திற்குள் மேலும் 3 முகங்கள் மறைந்திருக்கிறது. இந்த 3 முகங்களையும் 13 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க ஒரு ஜீனியஸ் தான்..

நம் கண்களே நம்மை ஏமாற்றுகிறதோ?.. என்று எண்ணும் அளவுக்கு நம்மை குழப்பும் வகையிலான படங்களை ஆப்டிகல் இல்யூஷன் என்கிறோம்.

இணைய உலகில் தற்போது ஒளி மாயைகள் என்று சொல்லப்படுகிற இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

ஓய்வு நேரத்தில் நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும்.. போட்டி உணர்வையும் தூண்டும் இந்த படங்களை நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். வாட்ஸ் அப் உள்ளிட்ட குழுக்களிலும் இல்யூஷன் படங்களை பகிரும் நெட்டிசன்கள் முதல் ஆளாய் விடையை சொல்லிவிட வேண்டும் ஆர்வம் காட்டுகின்றனர்... முதலில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாக பார்த்தால் விடையை கண்டுபிடிக்க முடியாது.

புதிர்கள் குறித்த படங்களும்

புதிர்கள் குறித்த படங்களும்


அதை உற்று நோக்கினால், நமது மூளையை குழப்பும் வகையில் சவால் காத்திருக்கும்... அதுவும் ஒரு சில படங்களை எல்லாம் நிமிடக்கணக்கில் பார்த்தால் கூட விடையை கண்டுபிடித்துவிட முடியாது... ஆப்டிகல் இல்யூசன் படங்களை போல புதிர்கள் குறித்த படங்களும் இதே ரகம்தான்... நமது கவனிப்புத்திறன், அறிவுக்கூர்மை உள்ளிட்டவற்றையும் ஓரளவு இதை வைத்து கணித்துவிட முடியும் என்று சொல்லப்படுவதால் தற்போதெல்லாம் சில போட்டித்தேர்வுகளில் கூட இந்த யுக்திகள் கையாளப்படுகிறதாம்..

3 முகம் இருக்கு

3 முகம் இருக்கு

அந்த வகையில் தான் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் நெட்டிசன்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த படத்தில் ஒருவரது முகம் போன்ற தோற்றம் இருக்கிறது. இதில் என்ன தான் கண்டுபிக்க வேண்டும் என்றால்... இந்த ஒரு முகத்திற்குள் 3 முகம் மறைந்து இருக்கிறதாம்... அந்த மூன்று முகங்களை தான் கண்டுபிடிக்க வேண்டுமாம்.. அதாவது கொடுக்கப்பட்ட படத்தில் முழுவதுமாக ஒரும் முகம் இருக்கிறது.. இந்த படத்திற்கு உள்ளேயே மேலும் 3 முகம் போன்ற உருவம் இருக்கிறது.. அதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால்...

13 செகண்ட் தான் டைம்

13 செகண்ட் தான் டைம்

அதுவும் 13 செகண்டில் இந்த 3 முகங்களையும் கண்டுபிடிப்பது தான் போட்டி.. சரி யார் முதலில் இந்த 3 முகங்களையும் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.. 13 செகண்ட் கவுண்டவுன் ஸ்டார்ட்.. படத்தை நன்றாக உற்று கவனியுங்கள்... ஏதாவது முகம் தெரிகிறதா... 3 முகங்களும் தெரிகிறதா... 13 செகண்டில் இடிஹ் உள்ள 3 முகங்களையும் கண்டுபிடித்தால் நீங்கள் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தா.. கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு கீழே டிப்ஸ் தருகிறோம்.

 இங்க தான் இருக்கிறது

இங்க தான் இருக்கிறது


முதலில் படத்தை உற்று பாருங்கள்.. குறிப்பாக அந்த முதியவர் போன்ற உருவத்தின் தாடிக்கும் சட்டை காலருக்கும் இடையில் நன்றாக உற்று கவனியுங்கள்... அதில் ஒரு முகம் போன்ற உருவம் தெரிகிறதா... 2-வது முகமானது அவரது பின் கழுத்துக்கும் பின் தலை முடிக்கும் இடையில் இருப்பது போன்று தெரிகிறதா.. சரி ஒகே... 3-வது முகம் எங்கு இருக்கிறது என்றால்... அவரது மூக்கிற்கு கீழ் இருப்பது போல் தெரிகிறதா.. தெரியவில்லை என்றால் மேலே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+