ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. 20-30 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டாத பாஜக! காரணம் இதுதான்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு, 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாஜக 60-70 தொகுதிகளில் மட்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ஜம்மு காஷ்மீர் சென்று, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக இங்கு, பாஜக வெறும் 20 தொகுதிக்குள் முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில், பாஜக வெறும் 60-70 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில், அமித்ஷா, நட்டா என முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், பாஜக வெற்றி வாய்ப்புக்கான தொகுதிகள் எது? கூட்டணியுடன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன்போது, ஜம்மு காஷ்மீரில் 60-70 தொகுதிகளில் மட்டும் கட்சி போட்டியிட்டால் போதும் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரை பொறுத்தவரை, பள்ளத்தாக்கில் உள்ள 25 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹப்பக்கடல், பாரமுல்லா உள்ளிட்ட பள்ளத்தாக்கின் வேறு சில இடங்களில் பண்டிட்களை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த பகுதியில் இடம் பெயர்ந்த பண்டிட்கள் சுமார் 1.22 லட்சம் பேர் இருக்கின்றனர். இது மிகப்பெரிய வாக்கு வங்கி. மீதமுள்ள 22 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்க பாஜக முடிவெடுத்திருக்கிறது. இங்கு பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு குறைவு.
இந்த தேர்தலை பொறுத்தவரை, ஆர்டிகள் 370 ரத்து, மாநில உரிமை உள்ளிட்ட விஷயங்களை காங்கிரசும், அதன் கூட்டணியான தேசிய மாநாட்டு கட்சியும், பாஜகவுக்கு எதிராக கையில் எடுக்க இருக்கிறது. மறுபுறம் தேசிய மாநாட்டு கட்சியின் சர்ச்சைக்குரிய தேர்தல் வாக்குறுதிகளை, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எடுக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications