ஆஹா தொடர்ந்து 3வது முறையா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! 'ஹைக்' குறித்து சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (DR) அடுத்த மாதம் உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

7வது ஊதிய கமிஷன்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். முதல் தொகுதி ஜனவரி மாதத்திலும், இரண்டாவது தொகுதி ஜூலை மாதத்திலும் வழங்கப்படும். அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரப்புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும். இந்த ஆண்டு ஜனவரியில் 132.8, பிப்ரவரியில் 132.7, மார்ச்சில் 133.3, ஏப்ரலில் 134.2, மே மாதத்தில் 134.7, ஜூன் மாதத்தில் 136.4 என AICPI தரப்புள்ளிகளை வெளியிட்டுள்ளது.

There are reports that the central government will announce the DA hike next month

முன்னதாக கடந்த இரண்டு முறையும் மத்திய ஊழியர்களின் டிஏ தொடர்ந்து 4 சதவிகிதமாக உயர்ந்து வந்திருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது முறையாகவும் டிஏ 4 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எதிர்பார்த்தபடி இந்த உயர்வு 4 சதவிகிதமாக இருந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு 8,000 ரூபாயில் இருந்து 27000 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

அகவிலைப்படி எவ்வளவு உயர்த்தப்பட வேண்டும்? நுக்வோர் விலை குறியீடு எந்த அளவுக்கு இருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் மத்திய அரசிடம் தொழிலாளர் நலத்துறை ஒப்படைத்துள்ளது. தற்போது மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. தற்போதுவரை வெளியாகியுள்ள தகவல்களை வைத்து பார்த்தால் செப்டம்பர் மாதம் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேலே குறிப்பிடத்தைப்போல மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இது உறுதி செய்யப்படும்.

இந்த சந்தோஷமான செய்திகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மத்திய அரசு தொடர்ந்து சில துறைகளில் உள்ள பணியிடங்களை அவுட் சோர்சிங் மூலம் நிரப்புவதற்கு தயாராகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் நிரந்தர வேலை வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வருகின்றன. எனவே இதற்கான போட்டியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+